siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 18 நவம்பர், 2016

அதிரடி சோதனையில் 12-வயது பெண் மற்றும் 6வாலிபர்கள் மீது குற்றச்சாட்டு!

கனடா-ரொறொன்ரோவின் வடபகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற  அதிரடி துப்பாக்கி சோதனையில் ஆறு இளவயதினர் மற்றும் 12-வயது பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. பொலிசாரின் அதிரடி 
சோதனையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 111 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.
 ரொறொன்ரோ பொலிசார் பிறப்பித்த ஒரு தேடுதல் ஆணையுடன் விஞ்ச் அவெனியு கிழக்கு பகுதியில் விக்டோரியா பார்க்கில் அமைந்துள்ள வீடொன்றில் செவ்வாய்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. 12-வயதுடைய பெண் ஒருவர் மீது ஒன்பது துப்பாக்கிகள் குற்றச்சாட்டுக்கள் தடை செய்யப்பட்ட சாதனங்கள் வைத்திருந்தமை
 குற்றச்செயல்கள் மூலம் சொத்துக்களை பறிமுதல் செய்தமை போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. ரொறொன்ரோவை சேர்ந்த 16-வயது பெண் மீது 19-ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களும் குற்றச்செயல்கள் மூலம் சொத்துக்கள் பறிமுதல் செய்த
 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் இரு 17-வயது வாலிபர்கள் 39-வயதுடைய பெண் ஒருவர் இரண்டு 16வயது பையன்கள் ஆகியோர் மீதும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. 18-வயதிற்குட்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 comments:

கருத்துரையிடுக