siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 2 டிசம்பர், 2016

ஊழியர் ஐபோன்களை திருடி 15 லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளார்!

ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முன்னாள் மூத்த மேலாளர் கிட்டத்தட்ட 5700 ஐபோன்களை திருடி அவற்றை 15 லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்திருக்கிறார்.
ஐபோன்களை திருடி விற்பனை செய்த சம்பவத்தில் தைவானைச் சேர்ந்த சாய் என்பவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது சீனாவின் ஷென்சென் பகுதியில் அமைந்திருக்கும் ஃபாக்ஸ்கான் ஆலைகளில் நடந்திருக்கிறது. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5எஸ் கருவிகளை தயாரிப்பு ஆலைகளில் இருந்து வெளியே எடுத்துச் செல்ல
 எட்டு பேரை நியமனம் செய்து, பின் அவற்றை பல லட்சங்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மொபைல் போன்களை தயாரிப்பதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் ஃபாக்ஸ்கான் ஆப்பிள் நிறுவன கருவிகளையும் தயாரித்து வருகிறது. கிட்டத்தட்ட 13 லட்சம் பணியாளர்களை கொண்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் கடுமையான பணி நிபந்தனைகளுக்காக குற்றம்சாட்டப்பட்டது.
ஐபோன்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து ஆப்பிள் நிறுவனம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 comments:

கருத்துரையிடுக