அயர்லாந்தில் வினியோகிக்கப்பட்ட கொக்கா-கோலா டின்களில் மனிதக் கழிவுகள் இருந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
லிஸ்பர்ன் நகரில் உள்ள கொக்கா-கோலா ஆலையில் கடந்த வாரம் ஒரு நாள் இரவுப் பணியின்போது, டின்களை நிரப்பும் இயந்திரங்கள் அடைத்துக்கொண்டதாகவும், அதைப் பரிசோதித்ததில் மனிதக் கழிவுகளை ஒத்த ஒரு திரவம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆலையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இதற்கிடையில், குழாய்களில் அசுத்தம் காணப்பட்டது உண்மைதான் என்றபோதும், அதனைக் கொண்டு நிரப்பப்பட்ட டின் தொகுதிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன என்றம் கொக்கா-கோலா நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இருந்தபோதிலும், அன்றைய தினம் வினியோகிக்கப்பட்ட டின்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்க அனுப்பப்பட்டுள்ளன.
இது மிக மிக அரிதாக நடக்கும் ஒரு தற்செயல் நிகழ்வு என்றும், அசுத்தமான கொக்கா-கோலா டின்கள் வினியோகத்துக்கு விடப்படவில்லை என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொக்கா-கோலா நிறுவனத்தின் பானங்களில் குறித்த வகை நஞ்சூட்டப்பட்டிருப்பதை நைஜீரிய நீதிமன்றம் ஒன்று
உறுதி செய்துள்ளது.
நைஜீரியாவில், கொக்கா-கோலா மற்றும் அதன் சகோதர உற்பத்திகளான ஃபென்ட்டா, ஸ்ப்ரைட் என்பனவற்றை அருந்துபவர்களின் பற்கள் விரைவாகப் பழுதாகிவருவதாகப் புகாரளிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளில், ஒன்றுக்கொன்று ஒவ்வாத அமிலங்கள் சில இந்தத் தயாரிப்புக்களில் சேர்க்கப்படுவதாகவும், அப்படிச் சேர்க்கப்படுவதால் அவை நச்சுத்தன்மை கொண்டவையாக மாறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நைஜீரிய உணவுப் பாதுகாப்பு அமைப்புக்கு சுமார் ஆறாயிரத்து ஐநூறு அமெரிக்க டொலர்களை அபராதமாகச் செலுத்தும்படி கொக்கா-கோலா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவ்வமைப்பின் பரிசோதனைகளின் பின் அவை தரமானவையாக அறிவிக்கப்படும் வரை உற்பத்தியை இடைநிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக