சீனாவில் நிகழ்ந்த ஒரு பயங்கர நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.
சீனாவின் தென் மேற்கு மாகாணமான சிச்சுவான், மோக்சியான் பகுதியிலுள்ள ஜின்மோ கிராமத்தில் இந்த சம்பவம்
நடந்துள்ளது.
அங்கு 40 வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. மலையின் ஒருபக்கம் இடிந்து விழுந்தததால் இந்த அசம்பாவிதம்
நடந்துள்ளது.
கற்கள் அப்பகுதியில் பாயும் நதியின் குறுக்கே சுமார் 2 கி.மீ தூரத்திற்கு படர்ந்து நதியின் போக்கை தடுத்து நிறுத்திவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவம் பெரும் மழை காரணமாக நடந்துள்ளது. புல்டோசர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று
வருகிறது
நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக