siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 7 டிசம்பர், 2018

வௌிநாடுகளில் 220 இலங்கையர்கள் மரணம்

வெளிநாடுகளில் பணிபுரிந்த 220 இலங்கைப் பணியாளர்கள் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
 தெரிவித்துள்ளது.
இதில் 52 பெண்கள் உள்ளடங்குவதுடன் 6 பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் பணியகத்தின் பேச்சாளர்
 ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் உயிரிழந்த 220 பேரில் 145 பேர் இயற்கை காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
25 ஆண்கள் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்திருக்கின்றனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 
தெரிவித்துள்ளது.
மேலும் வாகன விபத்துகளால் 21 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பணியாளர்கள் குவைட், ​சவூதி, கட்டார் ஆகிய நாடுகளிலேயே அதிகம் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கைப் பணியாளர்களின் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக, இந்த வருடத்துக்குள் 7 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 comments:

கருத்துரையிடுக