siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 15 டிசம்பர், 2018

இது தான் அதிகம் வெறுக்கப்பட்ட காணொளி YouTube அறிவித்தது

ஆண்டுதோறும் இணையத்தின் முக்கிய நிகழ்வுகள், பிரபலமடைந்த ஆடல் பாடல், விளையாட்டுகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவற்றைத் தொகுத்து காணொளியாக YouTube
 வெளியிட்டு வருகிறது.
YouTube Rewind என்ற அந்தக் காணொளியை அந்தத் தளம் ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் வெளியிடுகிறது. அதனை காணொளியைக் காண இணையவாசிகள் ஆவலுடன் காத்திருப்பர்.
ஆனால், இந்த ஆண்டு வெளியான YouTube Rewind 2018 காணொளி, இணையவாசிகளை முகம் சுளிக்க 
வைத்துள்ளது.
தளத்தின் ஆக அதிகம் வெறுக்கப்பட்ட காணொளி என்ற வேண்டாத பெயரையும் அது பெற்றுள்ளது. காணொளிக்கு இதுவரை 12 மில்லியன் பேர் வெறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இணையவாசிகளிடம் பிரபலமாக உள்ள YouTube நட்சத்திரங்கள் காணொளியில் இடம்பெறவில்லை என்று பலர் கூறியுள்ளனர். மேலும், 2018ல் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் காணொளியில் இடம்பெறவில்லை என்று வேறு சிலர் குறைகூறியுள்ளனர்.
Logan Paul, KSI ஆக YouTube நட்சத்திரங்கள் நடத்திய குத்துச்சண்டை விளையாட்டு, இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட 
நிகழ்வுகளில் ஒன்றாகும்.
அது போன்ற முக்கிய நிகழ்வுகள் காணொளியில் இடம்பெறவில்லை என்று பலர் குற்றம் சுமத்தியுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



                   

0 comments:

கருத்துரையிடுக