
அவுஸ்ரேலியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கைத்தீவைச் சேர்ந்த நடேசன் - பிரியா தம்பதிக்கு அந்நாட்டின் இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லேண்ட் - பிலோயிலா (BILOELA) நகரில் வசித்து வந்த இவர்களை, வீசா காலம் நிறைவடைந்த நிலையில் 2018ம் ஆண்டு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.எனினும் அதற்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம்...