தாய்லாந்து- மலேசிய எல்லையில் தாய்லாந்தின் Songkhla மாகாணத்தில் உள்ள Sadao மாவடத்தில் 7 சட்டவிரோத வழிகளை தாய்லாந்து எல்லை ரோந்து படையினர் கண்டறிந்துள்ளனர்.
மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழையும் தாய்லாந்து நாட்டவர்களும் புலம்பெயர்ந்தவர்களும் இவ்வழிகளை பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது.
Sadao மாவட்டத்தில் உள்ள 85 கி.மீ. எல்லையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கக்கூடிய 7 இடங்களை தாய்லாந்து அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக Songkhla மாகாண ஆளுநர் Jaruwat Kliangkla
o தெரிவித்திருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக எல்லையில் தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பலர் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கக்கூடிய நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எல்லைப்புற வேலிகளைக் கடக்கும் விதமாக வேலிகள் மீது ஏணிகள் அல்லது மரக்கட்டைகளை பயன்படுத்தியும் இன்னும் சில இடங்களில் வேலிகளை வெட்டியும் சில இடங்களில் வேலிகளுக்கு அடியில குழித்தோண்டியும் பலர் எல்லைகளை கடந்திருப்பதிருப்பதாக தாய்லாந்தின் Songhkla மாகாண ஆளுநர் Jaruwat Kliangklao
தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>
0 comments:
கருத்துரையிடுக