பின்லாந்து நாட்டில் 16 வயதான சிறுமி ஒரு நாள் பிரதமராக பதவி வகித்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான பின்லாந்தில் கடந்த புதன்கிழமை 16 வயதான சிறுமி நெல்லா சால்மினென் (Nella Salminen) ஒரு நாள் பிரதமராக
பதவி வகித்துள்ளார்.
உலகிலுள்ள இளம்பெண்களை ஒருநாள் அரசு அல்லது வியாபாரத்தில் தலைமை பொறுப்பை ஏற்க வைக்கும் பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நெல்லா சால்மினென், காலநிலை மாற்றங்கள், மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதேபோல் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி
ஐ.நா மகளிர் தினத்தை முன்னிட்டு, உகண்டாவின்
கல்வி அமைச்சர், சுவிஸர்லாந்து மத்திய ஆலோசகர் மற்றும் பல
முக்கிய இந்தோனேசிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் தமது பொறுப்புகளை இளம்பெண்களுடன் பகிர்ந்து
கொள்ள உள்ளனர்.
மேலும் பின்லாந்து அரசாங்கத்திற்கு 36 வயதான பிரதமர் சன்னா மரின் தலைமை தாங்கி வருகிறார். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 34 வது வயதில் ஆட்சி பொறுப்பை ஏற்ற உலகின் மிக இளைய பெண் அரசியல்வாதி என்ற பெருமையை பெற்றார்.
0 comments:
கருத்துரையிடுக