
பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்தை கோரியுள்ள இலங்கை தமிழர்கள் உட்பட்டவர்கள் தாம் ருவண்டாவுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்குவதாக அச்சம் வெளியிட்டுள்ளனர்.எனவே அவர்கள் பிரித்தானியாவில் மறைந்து வாழும் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பிரித்தானியாவுக்கு வந்த ஒருவர், தாம் உள்துறை அலுவலகத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்றும் அங்கு செல்வதனால் தமது...