siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

பணிப்பெண் கீதிகா ஷர்மா தற்கொலை விவகாரத்தில் கோபால் காந்தா சரண் (வீடியோ இணைப்பு)

20.08.2012.விமான பணிப்பெண் கீதிகா ஷர்மா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், முன்னாள் ஹரியானா அமைச்சர் கோபால் காந்தா டெல்லி காவற்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
13 நாட்களுக்கு முன்னர் ஆகஸ்டு 5ம் திகதி கீதிகா ஷர்மா எனும் 23 வயது இளம்பெண், தற்கொலை செய்து கொண்டதுடன், தனது மரணத்திற்கு கோபால் காந்தாவே காரணம் என தகவல் எழுதிவைத்திருந்தார்.
இதையடுத்து கடந்த 10 நாட்களாக தலைமறைவாகியிருந்த கோபால் காந்தா, இன்று அதிகாலை நான்கு மணியளவில் பாரத் நாகர் காவற்துறை நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்தார். எனினும் அவரது ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. சரண்டைந்த நிலையில் காந்தா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் காவற்துறையினரின் விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதே வழக்கில் , MDLR ஏர் லைன்ஸிம் மற்றுமொரு பணியாளர் அருணா சத்தா என்பவரும் காவற்துறையினரால் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கீதிகா ஷர்மா தனது இறுதிக்கடிதத்தில், கோபால் காந்தா ஒரு நயவஞ்சகன். அனைத்து பெண்களுடன் இரகசிய தொடர்பு வைத்திருப்பவர். அவரை நம்பியதே என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய பாவம். நன விலகிய போதும் காந்தாவும், சத்தாவும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மீண்டும் அவர்களது சொந்த நிறுவனத்தில் இணைந்து கொள்ளுமாறு வற்புறுத்தினர் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காதாவை தேடி, ஹரியானா ,கோவா, சிலுகுரி, மேற்கு வங்கத்தில் காவற்துறையினரின் ரெய்டு நடவடிக்கை தொடங்கியது. இந்நிலையில் அவரது சகோதரர் கோவிந்த் காந்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கோபால் காந்தா தற்போது சரணடைந்துள்ளது தொடர்பில், கீதா சர்மாவின் சகோதரர் அங்கித் தெரிவிக்கையில் ‘இது ஒரு திட்டமிட்ட சரணடைவு. அவர் தலைமறைவாகியிருந்த 12 நாட்களில், தனக்கும் கீதிகா சர்மாவுக்கும் இருந்த சகல தொடர்புகளுக்கான சாட்சியங்களையும் அழித்திருப்பார் என நான் அச்சப்படுகிறேன்.
கீதிகா ஷர்மாவின் பேஸ்புக் அக்கவுண்ட் தற்போது Deactivated ஆகியுள்ளது. காந்தாவே இந்த வேலையை செய்திருப்பார். இது தொடர்பில் டிசிபியிடம் முறையிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
கீதிகா ஷர்மா விமானப்பணிப்பெண்ணாக இருந்த போது கோபால் காந்தா அவருடனும் அவரது குடும்பத்துடனும் நெருங்கிப்பழகியிருந்ததுடன், கீதிகாவுடன் தனிப்படட் முறையில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக முன்னர் தகவல் வெளிவந்தது. அவரது மாத சம்பளம் ரூ.60,000 ஆக இருந்ததாகவும், இது கோபால் காந்தாவுக்கான பாலியல் சேவைக்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளமெனவும் அவரது சகபணியாளர்களிடமிருந்தான தகவல் வெளியாகியிருந்தது. எப்போதும் வேலை முடிந்து சில மணி நேரங்கள் கோபால் காந்தாவின் தனிப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கீதிகா சென்றுவிடுவார் என அவரது சக பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கீதிகா கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் தகவல வெளியாகியிருந்தது.
ஹரியானாவின் சட்டசபை உறுப்பினரான கோபால் காதா முன்னர் ஹரியானா வீடமைப்பு துறை அமைச்சர்காவும் கடமையாற்றியவர். MDLR ஏர்லைன்ஸ் எனும் அவரது சொந்த நிறுவனத்தில் கீதிகா ஷர்மா பணிபுரிந்து வந்தார்.

வீடியோ இணைப்பு

ஸ்ரீதேவிக்காக இலவசமாக நடித்த அஜித்

20.08.2012.
கொலிவுட், பாலிவுட் அனைத்திலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி 26 வருடங்களுக்கு பின்பு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற இந்தி படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கிலும் வெளியாகிறது. ஆங்கிலம் தெரியாத ஒரு குடும்பத் தலைவியின் அவஸ்தைகளே படத்தின் கதை.
ஒக்டோபர் 5ம் திகதி படத்தை வெளியிட செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இப்படத்தின் தமிழ் பதிப்பில் அஜித்தை கவுரவ தோற்றத்தில் நடிக்க வைக்க விரும்பினர். அஜீத்தை அணுகி கேட்டபோது உடனடியாக சம்மதித்தார்.
மும்பையில் படப்பிடிப்புக்காக பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டன. இதில் நடிப்பதற்கு அஜித்துக்கு கணிசமான தொகை சம்பளமாக கொடுக்க தயாரிப்பாளர் முன்வந்தார். மும்பை வந்து செல்வதற்கான விமான செலவுகள் ஓட்டலில் தங்கும் செலவு போன்றவற்றையும் ஏற்க முடிவு செய்து இருந்தனர்.
சமீபத்தில் மும்பை சென்று படப்பிடிப்பை அஜித் முடித்து கொடுத்தார். ஆனால் ஸ்ரீதேவியுடன் நடிக்க அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. விமானம் மற்றும் ஓட்டல் செலவுகளையும் தானே கவனித்து கொண்டார். அஜீத் நடவடிக்கைகளை படப்பிடிப்பு குழுவினர் வியந்து பாராட்டினர்.
ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனிகபூர் இதுபற்றி கூறுகையில், அஜித் அற்புதமான மனிதர். பெரிய நடிகராக இருந்தும் எளிமையாக நடந்து கொண்டார் என்றார்.

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிப்பு

20.08.2012.ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு நிறைய உள்ளன. ஆனால், ஆண்களுக்கு, காண்டத்தைத் தவிர வேறு கருத்தடை சாதனங்கள் பிரபலமாகவில்லை.

இதற்கிடையே, அமெரிக்க விஞ்ஞானிகள், ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளைக் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு மூலக்கூறுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள, "ஜெக்யூ1' என்ற பெயரிலான இந்த மாத்திரை, எலிகளுக்குக் கொடுத்து பரிசோதிக்கப்பட்டதில் அவை மலட்டுத்தன்மையுடன் காணப்பட்டன.

இது குறித்து, இந்த மாத்திரையை உருவாக்கியுள்ள விஞ்ஞானி ஜேம்ஸ் பிராட்னர் குறிப்பிடுகையில், "இம்மாத்திரையை உட்கொண்டால், விந்தணு உற்பத்தி கணிசமாகக் குறைந்து விடும். இருக்கக்கூடிய விந்தணுக்களின் நகரும் தன்மையும் தடைப்படும். இதனால், கருத்தரிப்பு நடப்பதற்கு வாய்ப்பில்லை. சோதனைக் கட்டத்தில் உள்ள இந்த மாத்திரை, விரைவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது' எனத் தெரிவித்துள்ளார்
 


துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பெண் பலி

20.08.2012.
வாதுவ பகுதியில் பெண்ணொருவர் இனந்தெரியாதவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 47 வயதுடைய டோன குப்தா இந்ராணி என்பவரே பலியாகியுள்ளார்.

சைக்கிளில் வந்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

வெள்ளவத்தை சம்பவம்: விசேட பொலிஸ் குழு நியமனம்

20.08.2012.வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட மூன்று சடலங்கள் குறித்த விசாரணைகள் தொடர விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை இராமகிருஷ்ணா டெரஸ் வீதியில் நேற்றுமுன்தினம் வீடொன்றில் இருந்து மூவர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து மகன் பிரகாஷ் குமாரசாமி கொட்டகலை டெலிகிளார் தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு கடந்த 16 ஆம் திகதி வந்து சென்றதாக தோட்ட மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பத்தனை பொலிஸார் இந்தக் குறிப்பிட்ட தோட்டத்துக்கு சனிக்கிழமை சென்று உயிரிழந்தவர்களின் வீட்டினை அவதானித்த போது வீட்டின் முன்கதவிலுள்ள பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அத்துடன் அந்தக்கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.

வீட்டினுள் சென்ற பொலிஸார் வீட்டிலுள்ள அறையொன்றில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பொருட்கள் சிதறடிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதையும் அவதானித்துள்ளனர்.


இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது

பருத்தித்துறை படகுத்துறை மீண்டும் மீனவர் பாவனைக்கு ஒப்படைப்பு

திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2012,பல வருடங்களாக இலங்கை அரசபடையினரின் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த வரலாற்றுப் புகழ்மிக்க பருத்தித்துறை படகுத்துறை நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.
நீண்டகாலமாக யுத்தத்தின் கோரத்தினால் சிதைவடைந்துபோயிருந்த குறித்த படகுத்துறை அண்மையில் திருத்தப்பட்டு நேற்று காலை மீனவர்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது.

உடலின் சமநிலையை அதிகரிக்கு​ம் ரெட் வைன்

திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2012,உடலுக்கு தகாத பானமாக கருதப்படும் மதுபானங்களும் சில சந்தர்ப்பங்களில் அதே உடலுக்கு மருந்தாக அமைந்துவிடுகின்றன.
அதன் அடிப்படையில் ரெட் வைன் மூலம் உடலின் சமநிலைத்தன்மையை (Balance) பேணும் ஆற்றலை அதிகரிக்கச் செய்ய முடியும் என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருமையான வெளிப்புறத் தோல்களைக் கொண்ட பழங்களில் செய்யப்படும் ரெட் வைனை நாள் ஒன்றிற்கு 7 கிளாஸ் அருந்துவதன் மூலம் இச்சமநிலை மேம்பாடு கிடைக்கப்பெறுகின்றது என்றும் இதனால் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களால் கூட சமநிலையைப் பெற்று சிறப்பாக செயற்பட முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நகரான பிற்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள Duquesne பல்கலைக்கழக பேராசியரான Dr Jane Cavanaugh என்பவரின் தலமையில் இடம்பெற்ற ஆய்வின்போது இத்தகவல்கள் வெளியாகியுள்ளது

புதிய சாதனை படைக்கவுள்ள விண்டோஸ் 7

19.08.2012.புதிய சாதனை படைக்கவுள்ள விண்டோஸ் 7
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, 11:36.41 மு.ப GMT ]
உலகளவில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை விட, விண்டோஸ் 7 இயங்குதளத்தை தான் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
விண்டோஸ் எக்ஸ்பி 42.8% பங்கினைக் கொண்டு மாதந்தோறும் 1% இழந்து வருகிறது.
விண்டோஸ் 7, 42.2% பங்கினைக் கொண்டு மாதந்தோறும் 1% உயர்ந்து வருகிறது.
விண்டோஸ் விஸ்டா, ஏறத்தாழ மொத்தமாகத் தன் பங்கினை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மிக உறுதியான இயங்குதளமாக விண்டோஸ் 7 வடிவமைக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நம்பிக்கையுடன் செயல்படும் தன்மை கொண்டது, பாதுகாப்பானது மற்றும் நாம் விரும்பி இயக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் இணைந்து இயங்குதல் போன்றவையும் காரணங்களாக தெரிவிக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு வரை விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மைக்ரோசாப்ட் சப்போர்ட் தரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்
 

பட்டுப் போன்ற கூந்தலுக்கு


20.08.2012.பெண்கள் பெரிதும் கவலைக் கொள்ளும் விஷயங்களில் முதலில் இருப்பது கூந்தல் தான்.
கவலை வந்தால் கூந்தல் உதிரும், அதேப்போல் கூந்தல் உதிர்ந்தால் மனக்கவலை வரும். இவ்வாறு கவலையும், கூந்தலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது.
அதிலும் பெண்களுக்கு அழகுத் தருவதில் முதலிடம் வகிப்பது கூந்தல் தான். அப்படிப்பட்ட கூந்தல் உதிர்ந்தால், பெண்கள் தங்களின் அழகில் ஏதோ ஒன்று குறைந்தது போல் வருத்தப்படுவர்.
ஆனால் என்ன தான் உடலில் ஏதாவது குறைவு தோன்றினாலும், கூந்தலில் குறைவு ஏற்பட்டால், அது மொத்த அழகையே கெடுத்துவிடும்.
அந்த அளவு பெண்கள் கூந்தல் மீது ஆசை வைத்துள்ளனர். அத்தகைய கூந்தலை உதிராமல், வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே உதிர்தலைத் தடுக்கலாம்.
கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் வழிகள்:
1. சமையலில் பயன்படுத்தும் வெங்காயத்தை நன்கு அரைத்து ஜூஸ் பிழிந்து, அந்த சாற்றை சூடேற்றாமல், அப்படியே முடியின் வேர்ப்பகுதிகளில் தடவ வேண்டும்.
முக்கியமாக இந்த சாற்றை தடவுவதற்கு முன், சூடான தண்ணீரில் நனைத்த துணியை அரை மணிநேரம் தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் வெங்காயச் சாறு எளிதில் தலையில் இறங்கி கூந்தல் உதிர்வதைத் தடுக்கும்.
2. பூண்டை நன்கு நசுக்கி அதிலிருந்து வரும் சாற்றை எடுத்து, கூந்தலின் வேர்ப் பகுதியில் படும்படி தேய்த்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் உதிர்வது குறைந்து, கூந்தலும் நன்கு வளரும்.
3. வெங்காயச்சாற்றுடன், ஒரு கப் பீர் மற்றும் சிறிது தேங்காய் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் போல் செய்து, கூந்தலில் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு சுத்தமான நீரால் அலச வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் உதிராமல் பட்டுப் போன்று வளரும்.
4. குளிக்கும் போது ஷாம்புவை கப்பில் போட்டு, அதை பீரால் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்தால், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதோடு பட்டுப் போல் மின்னும்

வடக்கில் கடும் வரட்சி: நன்னீர் மீன்பிடித் தொழில் பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012,வட பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக குளங்களில் நீர் வற்றியுள்ளமையினால் நன்னீர் மீன்பிடித்தொழில் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா நன்னீர் மீன்பிடியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் உறுப்பினரொருவர் கருத்துவெளியிடுகையில், தமது வாழ்வாதார தொழிலான நன்னீர் மீன்பிடித்தொழில் வரட்சி காரணமாக பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலங்களில் மழை பொழிந்தாலும் குளங்களில் உள்ள மீன்கள் அழிவடைந்தயினால் தமது தொழிலினை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் தாம் மாற்றுத்தொழில் ஒன்றினை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளையோ அல்லது வாழ்வாதார உதவிகளையேனும் பெற்றுத் தருவதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அந்த உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே. வடபிராந்தில் அதிக வரட்சி காரணமாக காட்டுப் பகுதிகள் தீக்கிரையாகி அழிவடைந்து வருகின்றது.இதன்காரணமாக அங்குள்ள ஏனைய வழங்களும் பாதிப்படைவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது