siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 29 செப்டம்பர், 2012

நயாகரா நதியின் இயற்கை அழகு[காணொளி],

29.09.2012.By.Rajahநயாகரா நதியின் இயற்கை அழகை ரசிக்கலாம் வாங்க – .இயற்கையின் உன்னத படைப்பான நயாகரா நதியின் இயற்கை அழகை வீட்டிலிருந்தபடியே ரசிக்கலாம் வாங்க

தென் ஆப்ரிக்க Vs பாகிஸ்தான் {போட்டி வீடியோ }

29.09.2012.By.Rajah.20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தென் ஆப்ரிக்க Vs பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி வீடியோ

காற்றைக் கொஞ்சம் பாடல் வரிகள் தமிழில்

 

29.09.2012.By.Rajah.நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் காற்றைக் கொஞ்சம் பாடல் வரிகள் தமிழில். நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் பாடல் வரிகள் தமிழில்

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா.
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே…
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே…
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் எந்ந மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டதோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்…
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

உலகிலேயே மிகபெரிய நாய் – கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்

29.092012.By.Rajah.
 

வியக்க வைக்கும் குகையின் புகைப்படங்கள் – ஆச்சரியம்

amazing cave photos 1

       

மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு





Saturday 29 September 2012.By.Rajah.௭திராக கடும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்!வசந்த பண்டார   இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் ஹெனி மெகாலி தலைமையிலான குழு வரும் 2013 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் தொனியிலான அறிக்கையை சமர்ப்பிக்கும் ௭ன்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு ௭திராக பிரேரணை கொண்டு வரப்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. ௭ல். பீரிஸே ஏற்றுக்கொள்ள வேண்டும் அத்துடன், ஐ.நா. வில் இலங்கையை ஆதரித்த நாடுகளை அரசாங்கம் நட்டாற்றில் விட்டுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெளிவுபடுத்துகையில்,
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.
இலங்கைக்கு ௭திராக பிரேரணை முன் வைக்கப்பட்டிருக்கும் இவ்வாறானதோர் பிரேரணையூடாக யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைகளுக்கான கடும் அழுத்தத்தை பிரயோகிப்பதே மேற்கத்திய நாடுகளின் திட்டமாகவிருந்தது.
இவ்வாறானதோர் சூழ் நிலையிலேயே ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டார்.
ஆனால் இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் தொழில்நுட்பக் குழுவான ஹெனி மெகாலி தலைமையிலான குழு ௭திர்வரும் 2013 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் தொனியிலான அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இதன் பின்னர் இலங்கை தொடர்பான யுத்தக் குற்றங்களுக்கான சர்வதேச புலன் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு அக்குழு இங்கு வரும் சாத்தியங்களும் உள்ளன.
அத்தோடு அவ்வாறான புலன் விசாரணைக்குழு இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளாது விசாரணைகளை நடத்தக் கூடிய அதிகாரமும் உள்ளது.
இதுவே நாம் ௭திர்நோக்கியிருக்கும் பயங்கரமான நிலைமையாகும்.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு ௭திராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வந்தபோது ௭மக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டோம்.
அப்போது 13 நாடுகள் அமெரிக்காவின் பிரேரணையை ௭திர்த்து ௭மக்கு ஆதரவு வழங்கியது. அமெரிக்காவின் பிரேரணையை ௭திர்த்தே ஆதரவு கேட்டோம். ஆனால் இன்று ௭ன்ன நடந்துள்ளது ௭ன்று கேள்வி ௭ழுப்பினார்.

கிளிநொச்சியில் வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு!


Saturday29September2012.By.Rajah.கிளிநொச்சி-கொக்காவில் பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கனரக வாகனம் மோதியதில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்வம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த தம்பிராசா எழில்வேந்தன்(வயது19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். வாகனங்களை மறித்து விட்டுக் கொண்டிருந்த சமயம் பின்னால் வந்த பக்கோ கனரக வாகனம் இளைஞரின் மீது மோதி அவர் மீது ஏறியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். தற்போது இவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணை களை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை வீதிப்புனரமைப்பினால் இடம்பெற்ற 4வது விபத்துச்சம்பவமும், உயிரிழப்புச் சம்பவமும் இதுவாகும், இதற்குக் காரணம் வீதிப்புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள் ள தென்னிலங்கை நிறுவனங்கள் போதியளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்வதில்லை.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து பொலிஸாரும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் கூட நடவடிக்கை எடுப்பதில்லை, கண்டுகொள்வதுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்ததக்க விடயமாகும்.

கணவன் மனைவிக்கு இடையில் சண்டை குழந்தை அடித்துக் கொலை


Saturday29September2012.By.Rajah.இரண்டு வயது மற்றும் 2 மாதம் நிரம்பிய குழந்தையை தாக்கி கொலை செய்த சந்தேகத்தில் கணவன் - மனைவி ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகலெவ - வீரகொல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் இக்கொலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த குழந்தையை அதன் தந்தை கற்குகை ஒன்றுக்குள் மறைத்து வைத்துள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து குழந்தையை பெற்றுத் தருமாறு தாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீகலெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழில் கொள்ளைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளது!


Saturday29September.By.Rajah.யாழ்ப்பாணத்தில் சென்ற வாரத்தில் மட்டும் 56 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுண்டுக்குழிப் பகுதியில் கடை உடைக்கப்பட்டு 17,200 பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன,
டக்கா வீதியிலுள்ள கடை ஒன்றில் 21,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன, சுன்னாகம் குப்பிளான் கிழக்கு பகுதியில் வீட உடைக்கப்பட்டு 2,77,500 பெறுமதியான வீட்டுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, சாவகச்சேரியில் முத்துக்குரார் கடை உடைக்கப்பட்டு நிறப்பூச்சு திருடப்பட்டுள்ளது.
கைதடி தொழில் பயிற்சி நிலையத்திலுள்ள கணினி உதிரிபாகங்கள் கொள்ளயிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரப்பகுதியில் பட்டப்பகலில் கடை உடைக்கப்பட்டு 12,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில் சென்று கொண்டு இருந்த பெண்ணின் தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத நபர்களினால் அறுத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 55,000 ரூபா என முறையிடப்பட்டுள்ளது.
கோப்பாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் குழு வீட்டைத் தீவைத்து கொழுத்திவிட்டு வீட்டில் உள்ள மோட்டார் சைக்கிள்களைத் திருடிச் சென்றுள்ளது. இச் சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் கவனிக்கப்படவில்லை: ஐ.நா சபையில் கரன் பார்கர் அம்மையார்!


Saturday29September2012.By.Rajah.இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் எதிராக சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான மனித உரிமைச் சட்ட மீறல்கள் பயனுள்ள முறையில் இன்னமும் கவனிக்கப்படாமல் உள்ளதென்பதனை ஐ.நா மனித உரிமைச்சபையோருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என மனித உரிமை பேராளர் கரன் பார்கர் அம்மையார் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்துள்ள ஜெனீவா- ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 21வது கூட்டத் தொடரில் உரையாற்றும்போதே அவர் இக்கூற்றினைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான நீதியினைக் கோரி ஐ.நா மனித உரிமைச் சபையில் அவர் ஆற்றிய உரையில், எங்களின் பார்வையில் சிறிலங்கா அரசின் முயற்சிகள்
உண்மையை கண்டறிதல், நீதி வழங்கல், நட்ட ஈடு வழங்கல், மேலும் இவை நடக்காதவாறு செய்தல் ஆகிய விடயங்களிலும் போதாமையாக உள்ளதோடு உண்மையை கண்டறிவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் அது ஆபத்தானதாகும் என ஐ.நா மனித உரிமைச் சபையோருக்கு எடுத்துரைத்துள்ளார்.
இலங்கைத்தீவில் 100 000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிர் இழந்ததை சிறிலங்கா அரசாங்கம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனைச் சுட்டிக்காட்டிய கரன் பார்கர், “சிங்கள வெற்றிப் பெருமிதம்” என்று ஐ.நா பொதுச் செயலரின் நிபுணர் குழுவினர் கூறியதைப் நினைவில் கொள்ளும் போது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் உண்மை, நீதி, நட்ட ஈடு, தீர்வு என்பன கிடைக்கப் போவதில்லை என்ற அச்சத்தினையும் ஐ.நா மனித உரிமைச் சபையோருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைச்சபையின் சிறப்பு கண்காணிப்பாளர்களை சிறிலங்காவுக்கு விரைவில் செல்ல ஐ.நா அனுமதி கோரும் என நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
கரன் பார்கர் அம்மையார், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வளஅறிஞர் குழுவின் பிரதிநிதியாகவும் நா.த.அரசாங்கத்தின் மதியூரைஞர் குழுவின் பிரதிநிதியாகவும் உள்ளார்.