siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 15 ஜூன், 2022

ஸ்ரீலங்கன் விமானியின் திறமையால் 275 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்

லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் (13-06-2022) பயணத்தை மேற்கொண்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யு.எல் 504 என்ற விமானம் நடுவானில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று பிற்பகல் குறித்த விமானம் பாதுகாப்பாக இலங்கைவந்து தரையிறங்கியது. இந்த விமானம், 275 பயணிகளுடன் லண்டனிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.சுமார் 33,000 அடி உயரத்தில் குறித்த பறந்துகொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் எயார்வேய்ஸூக்கு சொந்தமான விமானம் ஒன்று 35,000 அடி உயரத்தில் 
பறந்துகொண்டிருந்தது.
துருக்கி வான்வெளியில் 33,000 அடியில் இருந்து 35,000 அடி உயரத்திற்கு பயணிக்குமாறு துருக்கி – அங்காரா விமானக் கட்டுப்பாடு அறையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.
விழிப்புடன் இருந்த ஸ்ரீலங்கன் விமானி, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று 35,000 அடி உயரத்தில் தமது விமானத்திலிருந்து 15 மைல் தொலைவில் பயணிப்பதை கண்டறிந்து, அங்காராவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கினார்.
யு.எல் 504 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் குறித்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் புறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஸ்ரீலங்கன் விமானி வழங்கிய தகவலை சரிபார்த்த போது, அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை, யு.எல் விமானியிடம் 35,000 அடி உயரத்தில் எந்த விமானத்தையும் தாங்கள் ரேடாரில் கண்டறியவில்லை என்று தெரிவித்ததுடன், ஸ்ரீலங்கன் விமானம் மேல் நோக்கி பயணிக்க பணிக்கப்பட்டது.
எனினும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை தமது விமானத்தின் ரேடாரில் கண்டறிந்த ஸ்ரீலங்கன் விமானி, மீண்டும் அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவினருக்கு தகவல் கொடுத்தார்.சில நிமிடங்களுக்குப் பிறகு 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் விமானத்தை ரேடாரில் கண்டறிந்த கட்டுப்பாட்டு பிரிவு, ஸ்ரீலங்கன் விமானத்தை மேலே பயணிக்க வேண்டாம் என்று அவசரமாக பணித்தது.
ஸ்ரீலங்கன் விமானம் பணிக்கப்பட்ட உயரத்தில் பயணித்திருந்தால், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானத்துடன் மோதி பாரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த சம்பவம் குறித்து அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
யு.எல் 504 விமானத்தில் இருந்த 275 பயணிகள், அதன் பணியாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதன் பணியாளர்களின் உயிர்கள், யு.எல் விமானத்தின் தலைமை விமானியின் விழிப்புணர்வு மற்றும் சாமர்த்தியமான தீர்மானத்தின் காரணமாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ், UL 504 விமான மற்றொரு விமானத்துடன் மோதும் அபாயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை தாம் வலியுறுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளது.அத்துடன், தமது விமானிகளின் புத்திசாலித்தனமும், விமானத்தின் அதிநவீன தகவல் தொடர்பு அமைப்பும் விமானம் பாதுகாப்பாக பறக்க உதவியது என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

ஞாயிறு, 12 ஜூன், 2022

நாட்டில் ஜேர்மன் நாட்டவர் பட்டரி மின்சாரத்தில் இயங்கக்கூடிய வண்டியைவடிவமைத்துள்ளார்

முழுமையாக பட்டரி மின்சாரத்தில் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டியை ஜேர்மன் நாட்டவர் இலங்கையி்ல் 
வடிவமைத்துள்ளார்.
ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்த ஒருவரே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதன் மூலம் இலங்கையில் தனது சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தொடரும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சுற்றுலா வந்த இவர், தனது பயணத் தேவையை பூர்த்திசெய்ய இந்த முயற்சியே மேற்கொண்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



சனி, 4 ஜூன், 2022

அணுசக்தி நிறுவனம் ஒன்றின் லண்டனில் பொறியியலாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்ற தமிழ்ப்பெண்

லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியியலாளராக பணியாற்றும் வாய்ப்பை தமிழ்ப்பெண் 
ஒருவர் பெற்றுள்ளார்.
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த சுபிக்சா என்ற பெண்னே இந்த வாய்ப்பை
 பெற்றுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்ற நிலையில், யுஎஸ்ஏவில் எம்.எஸ் படிப்பை தொடர்ந்து இவ்வாறு
 தேர்வாகியுள்ளார்.
இதையடுத்து சுபிக்சாவை பலரும் வரவேற்று பாராட்டியுள்ளதுடன், சமூகவலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் 
குவிந்துள்ளது.இவருக்கு 
என்  இந்த இணையங்களின் வாழ்த்துக்கள் 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 3 ஜூன், 2022

நிகரகுவா நாட்டில்ல் மருத்துவ உதவி இன்றி குழந்தை பெற்றெடுத்த பெண்

பசிபிக் சமுத்திரத்தில் நிகரகுவா நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அவர் கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என எதுவும் மேற்கொள்ளவில்லை. மருத்துவர்களின் உதவி இன்றியே குழந்தை 
பெற்றும் உள்ளார்.
இவருக்கு கடந்த பிப்ரவரி 27ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுபற்றி ஜோசி கூறும்போது, சமுத்திரத்தில் குழந்தை பெற்று கொள்ள விரும்பினேன். இது எனது யோசனையில் இருந்தது. அதனுடன், அன்றைய தினம் சூழ்நிலைகளும் சரியாக இருந்தன. அதனால், சமுத்திரத்தில் குழந்தையை பெற்று 
கொண்டேன் என கூறியுள்ளார்.
இதற்காக பல வாரங்களாக அலையை கண்காணித்து வந்தேன். பின்பு குழந்தை பெற்றெடுக்க சரியான நேரம் வந்தபோது, பீச் பாதுகாப்புடன் இருக்கும் என தெரிந்து கொண்டேன் என கூறுகிறார்.
ஜோசிக்கு பிரசவ வலி வரப்போகிறது என தெரிந்ததும், அவரது குழந்தைகள் நண்பர்களுடன் தங்க வைக்கப்பட்டனர். அவரது கணவர், ஜோசியை வாகனத்தில் அழைத்து கொண்டு பீச்சுக்கு சென்றுள்ளார். உடன் துண்டுகள், நஞ்சுக்கொடியை எடுக்க பயன்படுத்த சல்லடை, ஒரு கிண்ணம், துணி வலை மற்றும் காகித துண்டுகள் உள்ளிட்ட குழந்தை பிறப்புக்கான உபகரணம் ஒன்றும் எடுத்து சென்றுள்ளார். ஏற்கனவே 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ஜோசி, அலைகளின் ஓசை உண்மையில் என்னை நன்றாக உணர 
செய்தது என கூறுகிறார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பசிபிக் சமுத்திர கடலோரம் பிரசவத்திற்கு முன் அமர்ந்து இருப்பது போன்றும் மற்றொரு வீடியோவில், தொப்புள் கொடியுடன் புதிதாக பிறந்த தனது மகனை கையில் வைத்திருக்கும் காட்சிகளும் உள்ளன. இந்த முறையில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் 
செய்துள்ளனர்.
இது தூய்மையானதா? கடலில் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன என ஒருவர் தெரிவித்து உள்ளார். இதேபோன்று மற்றொருவர், வெப்பம் நிறைந்த கருவறையில் இருந்து குளிரான சமுத்திரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என தெரிவித்து உள்ளார்.
ஆனால் அதற்கு ஜோஷி கூறும்போது, போதி நண்பகலில் சூரிய வெப்பம் 35 டிகிரி இருக்கும்போது பிறந்துள்ளான். அதனால், அவனுக்கு குளிர் ஏற்படும் என நாங்கள் கவலை கொள்ளவில்லை. நீர்சார்ந்த தொற்றுகளை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அவன் ஆரோக்கியமுடனேயே இருக்கிறான். இதற்காக தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, இது பாதுகாப்பானது என உறுதி செய்தே குழந்தை பெற்றெடுத்தேன் 
என்று அவர் கூறுகிறார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


செவ்வாய், 31 மே, 2022

அவுஸ்திரேலியாவில் இலங்கையில் வளர்ந்து வரும் நடிகையொருவர் அழகிப் போட்டியொன்றில் வெற்றி

இலங்கையில் வளர்ந்து வரும் நடிகையொருவர் அவுஸ்திரேலியாவின் அழகிப் போட்டியொன்றில் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் இலங்கை சிங்கள தொலைக்காட்சி நாடக நடிகையொருவர் வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனிதா பெரேரா எனும் மாடல் அழகியே இவ்வாறு அழகிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் ஸ்பெயினின் சான் ஜோஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அழகிக்கு கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சந்து கிரீடம் சூட்டவுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 27 மே, 2022

தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் வாக்குறுதி

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு வருவதற்காக இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டம் தொடர்பான தொழில்நுட்ப கலந்துரையாடலின் ஒரு கட்டத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதற்கமைய, நிலையான முறைகள் அடங்கிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஏனைய தரப்பினரின் ஆதரவுடன் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் 
தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஆதரவளிக்கும் ஒரு வேலைத்திட்டத்திற்கு கடன் நிலைத்தன்மை மீளமைக்கப்படும் என்பதற்கான போதுமான உத்தரவாதம் அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 22 மே, 2022

அசத்தல் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலியா தேர்தலில் இலங்கைப் பெண்

அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றார். அவர் இலங்கையைச் சேர்ந்த ரங்கே பெரேராவை (லிபரல்) தோற்கடித்ததாக 
கூறப்படுகிறது.
வில்ஸ் பகுதியில் கசாண்ட்ரா பெர்னாண்டோ போட்டியிடுகிறார். அவர் சமையல் துறையில் நன்கு அறியப்பட்ட சமையல்காரர். கசாண்ட்ரா ஒரு பெருமைமிக்க வெளிநாட்டவர், பேஸ்ட்ரி செஃப். அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கான வழக்கறிஞர் 
தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் தனது 11 வயதில் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்றார்.
அன்றிலிருந்து அவர் மெல்போர்னில் வசித்து வருகிறார். அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றை கசாண்ட்ரா பெர்னாண்டோ படைக்கவுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




வெள்ளி, 20 மே, 2022

இலங்கையர் களமிறங்கும் அவுஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டாட்சி தேர்தலில்

அவுஸ்திரேலியாவின் 47வது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டாட்சி தேர்தலில் அவுஸ்திரேலியாவில் உள்ள Skullin தொகுதியில் இலங்கையர் ஒருவர் போட்டியிடுகிறார்.
மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரும் மொரட்டுவையை வதிவிடமாகவும் கொண்ட விரோஷ் பெரேரா அவுஸ்திரேலியாவில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
விரோஷ் வணிக மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளராக 13 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
நாளை (21) தேர்தல் நடைபெற உள்ளது தான் ரே்தலில் போட்டியிடுவது தொடர்பில் விரோஷ் தெரிவிக்கையில், ‘
விக்டோரியா மாகாணத்திற்கு 38 லிபரல் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் நானும் ஒருவன். எனது திறமைகள் மற்றும் தொழில்முறை திறன்களின் அடிப்படையில் நான் லிபரல் கட்சிக்கு மதிப்புமிக்க நபராக இருப்பேன் என்று நம்புகிறேன். கடந்த காலத்திலும் இதே எம்.பி.க்கள் குழுவே ஆசனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
நமக்கு மாற்றம் வேண்டும். ஸ்கல்லின் தொகுதியில் மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதுடன், வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மற்றும் குடும்பங்களின் சமூக மதிப்பைப் பாதுகாப்பது என்பவற்றை நான் செய்வேன் என நம்புகிறேன், ”என்று விரோஷ் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 16 மே, 2022

மூன்று நாட்களில்வட கொரியாவில் எட்டு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

வட கொரியாவில் 3 நாட்களில் மட்டும் 8,20,620 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை
 ஏற்படுத்தின. ஆனால் இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வடகொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. வட கொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியது.
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன. இதனால் சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை
 வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு
 வடகொரியா கேட்டுக் கொண்டது.யாருக்குமே கொரோனா இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என வடகொரியா அதிபர் கிம் 
ஜாங் உன் அறிவித்தார்.
இந்நிலையில் எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரோன் வகை கொரோனா தொற்று காரணமாக வட கொரியாவில் முதல் கொவிட் -19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு
 வருகின்றது.
சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிரமாண்ட இராணுவ அணிவகுப்பின் மூலமாகவே கொரோனா பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை 1,74,440 பேருக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். இந்தநிலையில் 3 நாட்களில் மட்டும் 820,620 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 3.2 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஞாயிறன்று காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் அனைத்து மாகாணங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் முற்றிலுமாக ஊரடங்கில் உள்ளன. அலுவலகங்கள், உற்பத்தி அலகுகள் மற்றும் குடியிருப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் தடுக்கப்பட்டுள்ளன. நோய் பரவுவதை தடுக்க அவசரகால அதிகபட்ச தனிமைப்படுத்தல் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 2 மே, 2022

நியூசிலாந்து இலங்கைக்கு பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

இலங்கையில் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை வழங்க நியூசிலாந்து முன்வந்துள்ளது.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு 
எட்டப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>