siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 16 மே, 2022

மூன்று நாட்களில்வட கொரியாவில் எட்டு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

வட கொரியாவில் 3 நாட்களில் மட்டும் 8,20,620 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை
 ஏற்படுத்தின. ஆனால் இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வடகொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. வட கொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியது.
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன. இதனால் சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை
 வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு
 வடகொரியா கேட்டுக் கொண்டது.யாருக்குமே கொரோனா இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என வடகொரியா அதிபர் கிம் 
ஜாங் உன் அறிவித்தார்.
இந்நிலையில் எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரோன் வகை கொரோனா தொற்று காரணமாக வட கொரியாவில் முதல் கொவிட் -19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு
 வருகின்றது.
சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிரமாண்ட இராணுவ அணிவகுப்பின் மூலமாகவே கொரோனா பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை 1,74,440 பேருக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். இந்தநிலையில் 3 நாட்களில் மட்டும் 820,620 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 3.2 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஞாயிறன்று காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் அனைத்து மாகாணங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் முற்றிலுமாக ஊரடங்கில் உள்ளன. அலுவலகங்கள், உற்பத்தி அலகுகள் மற்றும் குடியிருப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் தடுக்கப்பட்டுள்ளன. நோய் பரவுவதை தடுக்க அவசரகால அதிகபட்ச தனிமைப்படுத்தல் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 2 மே, 2022

நியூசிலாந்து இலங்கைக்கு பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

இலங்கையில் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை வழங்க நியூசிலாந்து முன்வந்துள்ளது.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு 
எட்டப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 16 ஏப்ரல், 2022

விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் பறக்கும் இயந்திரப் போட்டி 2022

சிங்கப்பூர் பறக்கும் இயந்திரப் போட்டி 2022-இன் விருது வழங்கும் விழா.16-04-2022. இன்று சிங்கப்பூர் Expoவில் நடைபெற்றது.
COVID-19 தொடங்கியதிலிருந்து மாணவர்களுக்கான ஆகப்பெரிய நேரடி நிகழ்ச்சியாக அது அமைந்தது.
13ஆம் ஆண்டாக நடைபெற்ற சிங்கப்பூர் பறக்கும் இயந்திரப் போட்டி, DSO தேசிய ஆய்வுக் கூடத்தின் 50ஆம் ஆண்டுநிறைவைக்
 கொண்டாடியது.
இவ்வாண்டு 1,500க்கும் அதிகமானோர் போட்டியில் பங்கேற்றனர்.
சென்ற ஆண்டு போட்டியில் கலந்துகொண்டோரைவிட அந்த
 எண்ணிக்கை அதிகம்.
60க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
பங்கேற்பாளர்கள் 3 மாதப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
தங்களுடைய சொந்த பறக்கும் இயந்திரங்களை ஆராய்ந்து வடிவமைப்பதிலிருந்து அவர்களின் பிரமாண்டப் படைப்பை நீதிபதிகளிடம் முன்வைப்பதுவரை பங்கேற்பாளர்கள் கடினமாக
 உழைத்தனர்.
இறுதியாக Challenge Week எனும் சவால் வாரத்தின்போது தங்களின் பறக்கும் இயந்திரங்களின் திறனை பங்கேற்பாளர்கள் நிரூபிக்க வேண்டும்.
A பிரிவில் காகித விமானங்களை boomerang போல் தூக்கியெறியும் சவாலில் வென்றது இயூ டீ தொடக்கப்பள்ளியைச் (Yew Tee Primary School) சேர்ந்த குழு
அக்குழுவில் ஒருவர் சதீஷ் குமார்.
சிறுவயதிலேயே காகித விமானங்களைச் செய்த அவருக்கு வரையவும் பிடித்ததால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள அவை தூண்டியதாக
 சதீஷ் கூறினார்.
"என் காகித விமானத்தை boomerang போல் எவ்வாறு தூக்கியெறிவது என்பதை நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நான் நிறைய முறை அவ்வாறு செய்துபார்த்தேன். பல முறை அதை செய்த பிறகு நான் வெற்றியடைந்தேன்" என்றார் சதீஷ்.
முதல்முறையாக போட்டியில் கலந்துகொண்ட அவர் விமானங்கள் என்றால் தனக்குப் பிரியம் எனக் கூறினார்.
எதிர்காலத்தில் பொறியியல் படிக்க ஆசைப்படுவதாகவும்
 அவர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>






வியாழன், 17 மார்ச், 2022

அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி

சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 21-வது நாளாகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவை கைப்பற்றுவதில் மும்முரம் 
காட்டி வருகின்றன
இதற்கிடையே, உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீடிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சர்வதேச நீதிமன்ற உத்தரவு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்யாவிற்கு எதிரான வழக்கில் முழுமையான வெற்றியை
 பெற்றுள்ளோம்.
சர்வதேச நீதிமன்ற உத்தரவிற்கு ரஷ்யா உடனடியாக இணங்க வேண்டும். உத்தரவைப் புறக்கணித்தால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>> 


செவ்வாய், 8 மார்ச், 2022

தமிழ் இளைஞர்உக்ரைன் இராணுவத்தில் இணைந்த பின்னணி என்ன?

உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை தொடர்ந்தும் உக்கிரமடைந்து வரும் நிலையில் தமிழ் இளைஞரொருவர் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவரொருவரே இவ்வாறு உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைகழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் தற்போது நடைபெறும் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள துணை ராணுவ பிரிவில் மாணவர் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



புதன், 2 மார்ச், 2022

ரஷ்யா உலகில் தடைசெய்யப்பட்ட சக்திவாய்ந்த குண்டை வீசியது

உக்ரைனின் ஒக்த்ரைகா நகர் மீதே மிகவும் சக்தி வாய்ந்த வக்யூம் குண்டினை வீசியதாக அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மிக சக்திவாய்ந்த வக்யூம் குண்டு காற்றில் உள்ள ஒக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தி வெடிக்கப்படுகிறது. குண்டு வீசும் பகுதிகளில் உள்ள ஒக்சிஜன் வெடிபொருளுடன் கலந்து வெடிக்கும் போது, சாதாரண குண்டுகளை விட அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தி பெரும் சேதத்தை 
உண்டாக்கும்.
ஜெனீவா உடன்படிக்கைகளின்படி தடைசெய்யப்பட்ட வக்யூம் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா வீசியதாக அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் 
மார்க்ரோவே கூறினார்.
இந்த குண்டுவீச்சினால் ஏராளமான உக்ரைன் இராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
வேக்யூம் குண்டை பயன்படுத்துவது போர்க்குற்றம் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர்
 கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 1 மார்ச், 2022

இலங்கைத் தமிழ் அகதிகளிற்கு ஜேர்மனியில்ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஜோ்மனியில் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தைக் கைவிட கோரியும், தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் ஜேர்மனியில் புலம்பெயர் தமிழர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
50 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை கடந்த ஆண்டு ஜேர்மனி இலங்கைக்கு நாடு கடத்தியது. இந்நிலையில் மற்றொரு தொகுதி தமிழர்களை நாடுகடத்த ஜேர்மன் குடிவரவு துறை தயாராகி வருவதாக
 கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜேர்மன் அதிகாரிகள் நாடு முழுவதும் பாரிய சோதனைகளை நடத்தி 100 தமிழ் அகதிகளை தடுத்து வைத்து அவர்களின் வீடுகளை சோதனையிட்டனர்.
அத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்களை தங்களுடைய அனுமதியைப் புதுப்பிக்குமாறு அதிகாரிகள் அழைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கட்டடத்திற்கு வந்தவுடன் அவர்கள் பொலிஸ் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு அவர்களின் தொலைபேசிகள் பறிமுதல்
 செய்யப்பட்டன.
இதன் காரணமாக அவர்களது உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டதுடன் அதன் பின்னர் அவர்கள் பலர் நாடு கடத்தப்பட்டனர்.
அதேவேளை கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை உருவாக்குவதிலும் இணை அனுசரணை வழங்குவதிலும் ஜேர்மனி முக்கிய பங்கு வகித்தது எனினும் அகதிகளை அந்நாடு இலங்கைக்கு நாடு கடத்தி இருந்தமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

அரசாங்கதின் மகிழ்ச்சியான தகவல் பிரித்தானிய மக்களுக்கு

பிரித்தானியாவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் 
அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
அந்த வகையில், நேர்மறை சோதனை செய்தவர்களை சுயமாக தனிமைப்படுத்துவதற்கான சட்டத் தேவை கைவிடப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் கோவிட் தொற்று தொடர்பான இலவச ரேபிட்- ஆன்டிஜென் சோதனை முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும், இலவச ரேபிட் ஆன்டிஜென் சோதனை குறிப்பிட்ட பிரிவினரை இலக்காகக் கொண்டதாக இருக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளின் அர்த்தம், இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி தனிப்பட்ட பொறுப்புக்கு செல்ல தயாராக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரித்தானியாவில் பல்வேறு கோவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவுள்ளது. இது அங்கு வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
பெப்ரவரி 21- பெரும்பாலான கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்புகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை அறிகுறியற்ற பரிசோதனையை மேற்கொள்ளும் வழிகாட்டுதலை 
அரசாங்கம் கைவிடுகிறது.
பெப்ரவரி 24 – கோவிட் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தவர்கள் இனி சட்டப்பூர்வமாக சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
பெப்ரவரி 24 – முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நெருங்கிய தொடர்புகள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள் இனி ஏழு நாட்களுக்கு தினசரி சோதனை செய்ய சட்டப்பூர்வமாகத் தேவையில்லை.
ஏப்ரல் 1 முதல் – அறிகுறி மற்றும் அறிகுறியற்ற நபர்களுக்கான இலவச ரேபிட்- ஆன்டிஜென் சோதனை முடிவடையும்.
ஏப்ரல் 1 முதல் – கோவிட் அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும்போது தனிப்பட்ட பொறுப்பைச் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள், அதுவரை அவ்வாறு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

எச்சரிக்கை சூரியனில் இருந்து வெளியாகும் மின்காந்த புயலால் பூமிக்கு ஆபத்தாம்

சூரியனில் இருந்து வெளியாகும் மின்காந்த புயலால் பூமியில் உள்ள மின் சாதன பொருட்கள் பாதிக்கப்படலாம் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
சூரியனில் இருந்து அவ்வப்போது மின்காந்த புயல்கள் புறப்படும். தற்போது பூமி நோக்கி மிகுந்த வேகத்தில் வந்து கொண்டிருக்கும் மின்காந்த புயலால் செயற்கை கோள்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்
 பாதிக்கப்படலாம்.
இன்று இரவுக்குள் இது பூமியை அடையும். எனவே மின்னணு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிக்கையில் 
கூறப்பட்டுள்ளது.
எனவே மின்னணு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




வியாழன், 3 பிப்ரவரி, 2022

தற்காலிக விசாவுடன் ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்


ஆஸ்திரேலியாவில் கடந்த பல ஆண்டுகளாக தற்காலிக விசாவுடன் வாழ்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு வழியேற்படுத்தப்படவேண்டுமென பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் விரும்புவதாக ஆய்வு முடிவொன்று கூறுகின்றது.

மனித உரிமைகள் சட்ட மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற ஆஸ்திரேலியர்களில் 78 சதவீதமானோர், தற்காலிக விசாக்களில் உள்ளவர்கள் இங்கு நிரந்தரமாக குடியமர்த்தப்பட வேண்டுமென கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக நிலையற்ற வாழ்க்கை வாழும் அவர்களுக்கு, நிலையான எதிர்காலம் அமையவேண்டுமென கருத்து தெரிவித்த 78 வீதமானோரும் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை தற்காலிக விசாவுடன் இங்கிருப்பவர்கள், நாட்டின் சில துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வாக அமைவர் என, கடந்த டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 58 வீதமானோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலியர்கள் பணிபுரியத் தயங்கும் பல துறைகளில், இவர்கள் வேலைசெய்ய முன்வருவர் எனவும் 33 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல்லாமல் பல்கலாச்சார நாடான ஆஸ்திரேலியா, இவர்களால் மேலும் மெருகூட்டப்படும் எனவும், என்னவிதமான விசாவில் இருந்தாலும் தமக்கான நிலையான எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்படவேண்டுமெனவும், குறித்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்

இதுதொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள மனித உரிமை சட்ட மையத்தின் David Burke, தமது வாழ்க்கையைத் தாம் விரும்பியபடி திட்டமிட்டமிடுவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளதாகவும், ஆனால் ஆஸ்திரேலிய அரசின் விசா முறைமை பல குடும்பங்களை ஒன்றிணையமுடியாதவாறு பிரித்துவைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்காலிக விசாவுடன் இங்கு வாழ்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை, ஆஸ்திரேலியர்கள் தெளிவாக உணர்ந்துள்ளமையை இந்த ஆய்வு முடிவு வெளிப்படுத்துவதாகவும் David Burke மேலும் தெரிவித்தார்.