17.07.2012
தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசு நியாயமான தீர்வுகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இம்முறை உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது
மேலும்,தமது சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு கிடைக்காத காரணத்தினால்,உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முற்றாக புறக்கணிக்கும் இறுதித் தீர்மானத்தினை அவர்கள் எடுத்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்
மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இது தொடர்பில் கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம் என்பவற்றின் கல்விசார் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
|
0 comments:
கருத்துரையிடுக