இன்று காலை விநாயக வழிபாட்டுடன் உற்சவ நிகழ்வுகள் ஆரம்பமாகி யாக பூசை, கும்ப பூசை, என்பன இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து மூலமூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனை இடம்பெற்றது. பின்னர் கொடிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆலய உள்வீதி வலம் வந்ததுடன் வசந்த மண்டபத்தில் விநாயகருக்கு தீபாராதனை இடம்பெற்று ஊர்வலமாகக் கொடித்தம்பத்துக்குக் கொண்டுவரப்பட்டது.0கொடிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆலய உள்வீதி வலம் வந்ததுடன் வசந்த மண்டபத்தில் விநாயகருக்கு தீபாராதனை இடம்பெற்று ஊர்வலமாகக் கொடித்தம்பத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இதன் போது, கொடித்தம்பத்துக்கு விசேட பூசைகளும் வேத நாத பாராயணங்களுடன் கொடியேற்றமும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து கொடித்தம்பத்துக்கு அபிஷேகமும் தீபாராதனைகளும் இடம்பெற்றன. மகோற்சவ தீர்த்தம் எதிர்வரும் ஆடியமாவாசைத் தினமான 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக