டி.வி பார்த்துக் கொண்டே தந்தையை சுட்டுக்கொன்ற 3 வயது சிறுவன் |
16 யூலை 2012 |
டி.வி
பார்த்துக்கொண்டிருந்த 3 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் தந்தை
பலியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவர் மிக்கேல் பேலெஸ் (வயது 33).
இவர் தனது இரண்டு மகன்களுடன் அருகில் அமர்ந்து வீட்டில் டி.வி நிகழ்ச்சிகளை ரசித்து
பார்த்துக் கொண்டிருந்தார். அவர் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை அருகில் வைத்திருந்தார். அப்போது துப்பாக்கியை எடுத்து வைத்து அவரது 3 வயது சிறுவன் டி.வி. பார்த்தான். டி.வி. நிகழ்ச்சியில் மும்முரமாக இருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக துப்பாக்கி விசையை அழுத்தினான். குண்டுகள் நிரப்பப்பட்டு இருந்ததால் துப்பாக்கி வெடித்து குண்டு மிக்கேலின் உடலில் பாய்ந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதைப்பார்த்த 2 சிறுவர்களும் செய்வதறியாது கதறி அழுதனர். பொலிசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆபத்தான பொருட்களை சிறுவர்கள் கண்ணில் படும் வகையில் வைக்க கூடாது, என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. |
திங்கள், 16 ஜூலை, 2012
டி.வி பார்த்துக் கொண்டே தந்தையை சுட்டுக்கொன்ற 3 வயது சிறுவன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக