siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 16 ஜூலை, 2012

கனடாவில் வெப்பநிலை உயரும் அபாயம்: மக்களுக்கு எச்சரிக்கை

 16யூலை 2012
கனடாவில் ஒண்டோரியாவிலும், கியூபெக்கிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கனடாவின் சுற்றுச் சூழல் துறை தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் கியூபெக்கில், குறிப்பாக அதன் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் வெப்பநிலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அதிக தண்ணீர் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டது. வயதானவர்களும், சிறுவர்களும் வெப்பம் தாக்காத வண்ணம் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டது.
நேற்று மொன்றியல் நகர மக்கள் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க விரும்பி கடற்கரைகளில் குவிந்தனர்.
அங்கு வெயில் 33 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த போதிலும், அதனால் ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருந்தது.
ஒட்டாவா மாகாணத்தில் ரிடியு ஆற்றின் நீர்மட்டம் வெப்பத்தின் தாக்கத்தால் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட வறட்சி எச்சரிக்கை விடப்பட்டது.
தெற்கு ஒண்டோரியாவிலும் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இப்பகுதியினர் தங்கள் வீடுகளை குளிரூட்டவும், மின்விசிறி பொருத்தவும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
ஒண்டோரியோவின் கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் டொரொண்டோ, கிங்ஸ்ட்டன் மற்றும் பெலிவெலி நகரங்களில் அலைகாற்று வீசும் அபாயமும் உள்ளது. வெயில் அதிகரிப்பதோடு அனல் காற்று வீசுவதும் அதிகரிக்கும்.
மேலும், தற்போது சில வாரங்களாக கனடாவின் பல பகுதிகளிலும் வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது

0 comments:

கருத்துரையிடுக