siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 14 ஜூலை, 2012

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீருடை வழங்குமாறு கோரிக்கை

மன்னார் முச்சக்கர வண்டிச் சாரதிகளை அடையாளம் காணும் வகையிலும்,மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தில் பதிவில் உள்ளவர்களையும் அடையாளம் காணும் வகையில் அவர்களுக்கு சீருடைகளை வழங்க உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என மன்னார் மக்களும்,சமூக ஆர்வலர்களும் உரிய தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தொடர்ந்தும் மன்னாரில் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலரால் இளம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதும் மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவிக்கின்றனர்.
மன்னார் தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாகவுள்ள முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து சேவையாற்றி வரும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சிலர் மீதே குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு அதன் தலைவரும்,முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களும் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருவதோடு தம்மீது சுமத்தப்பட்ட பழியால் தமது தொழில் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறித்த தரிப்பிடத்தில் மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலர் செய்கின்ற குறித்த செயலினால் அனைவரும் பாதிக்கப்படுவதாக குறித்த தரிப்பிடத்தில் உள்ளோரால் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே குறித்த குற்றச் செயல்;களில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளை அடையாளம் காண்பதற்காக அவர்களுக்கு இலக்கங்கள் பிரசுரிக்கப்பட்ட சீருடையினை வழங்க மன்னார் நகர சபையும்,மன்னார் முட்ச்சக்கர வண்டி சங்கமும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் மக்களும்,சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக