siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 14 ஜூலை, 2012

யாழ். பிரதான வீதியின் கரையில் உள்ள வீடுகளின் சுவர்கள் கருமை நிறத்தில்

யாழ். பிரதான வீதியில் வீதி அபிவிருத்திப் பணிகளின் போது வீதிக்கு இயந்திரம் மூலம் தார் தெளிக்கும் செயற்பாட்டினால் வீதிக்கரையில் உள்ள மக்கள் விசனத்துக்குள்ளாகியுள்ளனர்.

யாழ் கண்டி வீதியில் தற்போது வீதி புனரமைக்கப்பட்டு வருகிறது. வீதிக்கு தார் தெளிக்கும் செயற்பாடு இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்போது வீதிக்கரையில் உள்ள பரவி வீடுகளின் மதிற்சுவர் மீது தார் தெளிபட்டுள்ளது. இதனால் மதிற்சுவர் மட்டுமன்றி வீட்டின் சுவரும் கருமை நிறமாகக் காட்சியளிக்கின்றன.

இதனால் பொது மக்கள் விசனமடைந்துள்ளனர். ஆயினும் உரிய அதிகாரிகள் பார்வையிட்டு மீண்டும் வர்ணம் பூசும் நடவடிக்கை மேற்கொள்ள உறுதியளித்ததுடன், சில வீடுகளுக்கு வர்ணம் பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயினும், வீடுகளுக்கும் சுவருக்கும் வர்ணம் பூசி நிவாரணம் வழங்கப்பட்ட போதிலும் வீட்டிற்கு மேலும் அழகைத் தந்த பூச் செடிகள் மீதும் தார் பரவி அவை தீயில் கருகியது போன்று காட்சியளிக்கின்றன. இதனால் அம் மக்கள் தமது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
 

0 comments:

கருத்துரையிடுக