Friday, 31 August 2012, BY-rajah. |
பாலிவுட்டில் உருவான இங்கிலீஷ் விங்க்லீஷ் படம் இந்தி, தமிழ் இரு மொழிகளில் விரைவில் வெளியாகிறது. |
இந்தியாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி இதில் இல்லத்தரசியாக நடித்துள்ளார். படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். கெளரி ஷிண்டே படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் சென்னை பிவிஆர் திரையரங்கில் இங்கிலீஷ் விங்கிலீஷ் பட ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் படத்தயாரிப்பாளர்- பாலிவுட் இயக்குனர் பால்கி, ஸ்ரீதேவி, படத்தின் இயக்குனர் கௌரி ஷிண்டே, ப்ரியா ஆனந்த் ஆகியோர் படத்தை பற்றி பேசினர். ஆங்கிலம் தெரிந்தவர்களை சமூகம் மேலானவர்களாக பார்க்கிறது. ஆங்கிலம் தெரியாதவர்களை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம். ஆங்கிலம் தெரியவில்லையே என்று நினைப்பவர்களை பற்றிய படம் இது என்று குறிப்பிட்டார் தயாரிப்பாளர் பால்கி. ப்ரியா ஆனந்த் கூறுகையில், நான் ஸ்ரீதேவி அம்மாவின் ரசிகை. அவருடைய நடிப்பை பார்த்து வியந்துள்ளேன். அவருடன் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன் என்றார். படத்தின் நாயகி ஸ்ரீதேவி கூறுகையில், பல வருடங்களுக்கு பிறகு நான் நடித்த படம் இந்தி, தமிழ் மொழிகளில் வெளியாகிறது. பால்கியின் தயாரிப்பில் முதன் முதலாக பெண் இயக்குனர் கெளரி ஷிண்டே உடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்தப்படம் எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். நான் தொடர்ந்து தமிழ் படங்களை ரசித்து வருகிறேன். தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்ததை என்னால் எப்போது மறக்க முடியாது. தமிழில் நல்ல கதை, பொருத்தமான கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன். ரஜினி, கமல்ஹாசன் இருவருடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். |
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012
இங்கிலீஷ் விங்கிலீஷ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ஸ்ரீதேவி
வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012
செய்திகள்