15-08-2012.ஆரோக்கியமான பெண்களால் தான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும். ஆனால்
இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால்
நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர்.
சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம்.
குடும்பத்தை பற்றிய சிந்தனையாலும், பணிச் சூழலாலும் பெண்களுக்கு தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.
கரோட்டினாய்டு உணவுகள்
பெண்கள் உண்ணும் உளவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறி பழங்களில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவுகள் பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.
ஒமேகா 3 உணவுகள்
பெண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் மத்தி உள்ள அனைத்து வகை மீன்களையும் உட்கொள்ளலாம்.
மீன் தவிர, சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றையும் உட்கொள்ளலாம்.
இதன் மூலம் இதயநோய்கள், முடக்குவாதம் போன்றநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். வால் நட் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
அத்திப்பழம், பால்
அத்திப்பழம் எண்ணற்ற தாதுச் சத்துக்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அணுக்களை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் சத்து போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக கிடைக்கச் செய்கின்றன. எனவே வாரம் இருமுறையாவது அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் பெண்கள் தினசரி இருவேளை பால் உட்கொள்ள வேண்டும். பாலில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.
ஓட்ஸ், தக்காளி
ஓட்ஸ் உணவில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் வைட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு பிஎம்எஸ் எனப்படும் மாதவிடாய் கால சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
கீரைகளில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் பெண்களுக்கு பி.எம்.எஸ் சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. எனவே தினசரி உணவில் பெண்கள் கீரையை உட்கொள்ள வேண்டும்.
தக்காளியில் உள்ள லைகோபீன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது மிகச்சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது.
இது இதயநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்கள் அன்றாட உணவில் தக்காளியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்