சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சண்டிலிப்பாய் அரசடி சித்தி விநாயகர் ஆலயத்தில் பெறுமதி மிக்க ஐம்பொன்னிலான பிள்ளையார் சிலை ஒன்று திருடிச்செல்லப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10ம் திகதி ஆலயத்தில் இரவு பூசைகளை முடித்துவிட்டு கதவைப் பூட்டிச்சென்றதாகவும், காலையில் வந்து பார்த்து போது ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாகவும் ஆலய பூசகர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்த ஆலயத்தின் உள்ளே சென்று பார்த்தபோது பழமை வாய்ந்த பல லட்சம் ரூபா பெறுமதியான பிள்ளையார் சிலை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை மானிப்பாய் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தோடர்ந்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த பல மாதங்களாக யாழ். குடாநாட்டில் உள்ள ஆலயங்களில் சிலைகள் திருட்டுப் போவது இல்லாது காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஆலயங்களில் சிலைகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.