நாய் ஒன்றைப் பற்றிய செய்தி !எஜமானனின் மரணத்தை வீட்டுக்காரர்களுக்கு சொல்ல முயன்ற நாய் ஒன்றைப் பற்றிய செய்தி அண்மைய நாட்களில் சிங்கள ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
பண்டுவஸ்நுவரவைச் சேர்ந்த 70 வயது முதியவரான பெனடிக் பீரிஸ் என்பவர்தான் இந்நாயின் சொந்தக்காரர்.
இவர் எங்கெல்லாம் செல்கின்றாரோ அங்கெல்லாம் நாயும் கூடவே செல்லும்.
சம்பவ தினம் காலையில் இவர் கிணற்றில் குளிக்க சென்று விட்டார்.
தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்து போனார்.
இவர் இறந்தமையை நாய் உணர்ந்து கொண்டது.
இம்மரணச் செய்தியை வீட்டுக்காரர்களுக்கு தெரிவிக்க விரைந்து சென்றது.
வழமைக்கு மாறான விதத்தில் தேம்பித் தேம்பி புலம்பிக் கொண்டு இருந்தது. ஊளையிடவும் செய்தது.
ஆயினும் இது சொல்ல முயன்ற செய்தியை வீட்டுக்கார அம்மா புரிந்து கொள்ளவில்லை.
எஜமானனை விட்டு விட்டு நாய் தனியே ஒரு போதும் வருவதில்லை.
எனவே கணவன் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கூப்பிட்டுப் பார்த்தார்.
கணவனை ஓரிடத்திலும் காண முடியவில்லை.
ஏதோ விபரீதம் நடந்து விட்டது எனப் புரிந்து கொண்டார்.
கிணற்றடியை நோக்கி ஓடினார்.
கணவன் பயன்படுத்துகின்ற சோப், கப் ஆகியன கிணற்றுக்கு அருகில் காணப்பட்டன.
கணவன் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார் ஊகித்துக் கொண்டார். கிணறு ரொம்பவே ஆழமானது. வேலைக்கு சென்று இருந்த மகனை அவசரமாக தொடர்பு கொண்டு வர வைத்தார். பொலிஸாரும், சுழியோடிகளும் வரவழைக்கப்பட்டனர்.
சடலம் மீட்கப்பட்டது.
எஜமானனின் மரணச் செய்தியைத்தான் நாய் கொண்டு வந்திருந்தது என வீட்டுக்காரர்களுக்கு விளங்கிக் கொண்டது