Wednesday03October2012.By.Rajah. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம்! இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அமைக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் நேற்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் இத்திட்டம் ஆரம்ப வைபவம் நேற்று மாலையில் நடைபெற்றது. இதன்போது இப்பகுதியில் ஜந்து மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பொது சந்தைக் கட்டிடமும் இவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட பொது மக்கள் ஏமாற்றப்பட்டனர்.
பொது மக்கள் எவரும் குடியிருக்காத இப்பகுதியில் இந்திய வீட்டுதிட்டம் வழங்கப்படவுள்ளது என்று கூறி அமைச்சர் டக்ளஸ் மற்றும் இராணுவத்தினரது ஏற்பாட்டில் பொது மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து தனி பஸ்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இது தவிர, இந்நிகழ்வில் வரவேற்புக்காக அழைத்துவரப்பட்ட பெண்கள் கட்டாயப்படுத்தி நீல நிலத்திலான சேலை அணிவிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு பொது மக்களின் கைகளிலும் இந்திய - இலங்கை கொடிகளை கட்டாயப்படுத்தியே வழங்கியதாகவும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஸ மதுவில் மயங்கி இருந்தாரா?
இந்நிகழ்வுகளுக்கு முன்னர் மடுவில் நடைபெற்ற இந்திய வீட்டுதிட்ட நிகழ்வின் பின்னர் கிளிநொச்சி பகுதியிலுள்ள இராணுப்வபடை முகாமிலேயே இவர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடாகியிருந்ததோடு யாழ். இராணுவத் தலைமையகத்திற்கும் விஜயம் செய்திருந்ததாக தெரியவருகின்றது.
இவைகளைத் தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஸ வழமைக்கு மாறான செயற்பாடுகளை மேற்கொண்டதைக் காண முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சந்தைக் கட்டிடத்தை திறக்கும் படி பசில் ராஜபக்ஸவை அழைத்த போது அவர் அமைச்சர் டக்ளஸ் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்டவர்களை திறக்கும்படி அழைத்து விட்டு கைகட்டி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இறுதியாக சந்தை கட்டிடத்தினை நாடா வெட்டி மட்டும் திறந்து வைத்ததோடு இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவர் உரையாற்றாமல் மிக வேகமாக நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வந்த வேகத்தில் திரும்பி சென்றுள்ளார்.