siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 2 அக்டோபர், 2012

இலங்கை தொடர்பில் கேள்வி கேட்க ஐ.நாவில் அனுமதி இல்லை?: இன்னர் சிட்டி பிரஷ் குற்றச்சாட்டு

 
செவ்வாய்க்கிழமை, 02 ஒக்ரோபர் 2012,By.Rajah.ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகள் தொடர்பிலான கேள்விகளை கேட்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று இன்னர் சிட்டி பிரஷ் இணையத்தளம் குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்றைய தினம் பான் கீ மூன் மற்றும் ஜீ.எல்.பீரிஷ் ஆகியோர் சந்தித்த பின்னர், பான் கீ மூன் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. இதற்காக சில கேள்விகளை இன்னர் சிட்டி பிரஸ் முன்னதாகவே சமர்ப்பித்திருந்ததாக கூறப்படுகிறது.
எனினும் பான் கீ மூன் உரையாற்றும் போது, கேள்விகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பிற்பகல் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச்செயலாளரது ஊடக சந்திப்பும் இடைநிறுத்தப்பட்டது.
அத்துடன் வழமையாக இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகளின் பேச்சாளரது நாளாந்த சந்திப்பு, இன்றைய தினம் நடைபெறவுள்ள சபையின் பிரதிப் பொதுச்செயலாளர் ஜோன் எலிசனின் செய்தியாளர் சந்திப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது இந்த சந்திப்பும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பான் கீ மூனின் ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கை தொடர்பான கேள்விகளை முன்வைக்க தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் கூறும் விடயங்களுக்கு புறம்பாக எதனையும் கேட்க முடியாதிருப்பதாகவும் இன்னர் சிட்டி பிரஷ் சுட்டிக்காட்டியுள்ளது