siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 2 அக்டோபர், 2012

போர் இடம்பெற்ற பிரதேசங்களில் வேலையில்லாப் பிரச்சினை உக்கிரம்

 
 
செவ்வாய்க்கிழமை, 02 ஒக்ரோபர் 2012,By.Rajah.போர் இடம்பெற்ற பிரதேசங்களில் வேலையில்லாப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாக IRIN ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
வடக்கில் வேலையற்றோர் எண்ணிக்கை பற்றிய உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் இல்லாத போதிலும், வடக்கில் கிட்டத்தட்ட 30 வீதமானவர்கள் வேலையின்றி அல்லலுறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2012ம் ஆண்டு அரசாங்கப் புள்ளி விபரங்களின் அடிப்படையில் வடக்கில் 280000 இளைஞர் யுவதிகள் வாழ்ந்து வருகின்றனர். வடக்கின் பல பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கூலித் தொழிலையையே பிரதான வாழ்வதாரமாகக் கொண்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நிரந்தரத் தொழில் கிடையாது.
தெற்கைச் சேர்ந்தவர்களும் இராணுவத்தினரும் அதிகளவில் வடக்கு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதனால், பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
பொதுவாக வடக்கின் பல பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் இன்னமும் உரிய முறையில் முதலீடு செய்யவில்லை எனவும் இதனால் தொழில் வாய்ப்புக்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவில் காணப்படவதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது