siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 2 அக்டோபர், 2012

வடக்கில் மாகாண சபை இன்றி, திவிநெகும திட்டத்தை அமுலாக்க முடியாது

 
செவ்வாய்க்கிழமை, 02 ஒக்ரோபர் 2012,By.Rajah.வடமாகாணத்தில் மாகாண சபை அமைக்கப்படாத நிலையில், திவி நெகும சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது சட்டத்துக்கும், அரசியல் அமைப்புக்கும் முரணானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள முக்கிய சட்டத்தரணி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் 13ம் திருத்தச் சட்டத்தின் கீழும், இலங்கையின் அரசியல் யாப்பின் அடிப்படையிலும், மாகாண சபைகளின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது, ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் இலங்கையில் வடக்கிலும் மாகாணம் என்ற ஒன்று இருக்கின்ற நிலையில், அதன் மாகாண சபையில் இந்த சட்ட மூலத்துக்கு அனுமதி பெறுவது முக்கியமானதாக காணப்படுகிறது.
இந்த நிலையில், வடமாகாண சபையின் அனுமதியை பெறுவதற்காக, வடமாகாண ஆளுனரின் தன்னிச்சையான அனுமதியை அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமா, அல்லது அரசியல் காரணங்களுக்காக வடக்கில் உடனடியாக அரசாங்கம் தேர்தல் நடத்துமா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்