Friday 05 October2012..By.Rajah.செயற்பாடுகளுக்குஉடந்தையாளர்களாக உள்ளனர்!சிறீலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள தேசிய மாணவர் படையணி தமிழினத்தின் அடுத்த தலைமுறையிடமுள்ள தேசிய சிந்தனையினை பறிக்கும் முயற்சி என்பதை தமிழ் அரசியல் தலைமைகள் மறந்துபோயுள்ள நிலையில், பெற்றோரும், ஆசிரியர்களும் இராணுவத்தினரின் செயற்பாடுகளுக்கு உடந்தையாளர்களாக மாறியிருக்கும் அபாய நிலை வடக்கில் தீவிரமடைந்திருக்கின்றது.
யுத்தத்தின் பின்னர் வடக்கில் "கெடெக்" என்ற பெயரில் பாடசாலை உயர்தர மாணவர்களையும், பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக்கொண்டு இராணுவப்பயிற்சியளிக்கப் பட்டிருந்தது. எனினும் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் பாடசாலை மாணவர்களை மட்டும் வைத்துக்கொண்டு தேசிய மாணவர் படையணி அமைக்கப்பட்டது.
இதில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு தெற்கிலும், வடக்கிலும் படையினரால் இராணுவப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இதனை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்திருந்த தமிழ் அரசியல் தரப்புக்கள் பின்னர் பின்வாங்கிக் கொண்டதுடன், இந்தவிடயம் குறித்துப் பேச தயாரற்ற நிலைக்கும் சென்றனர். எனவே படையினரின் செயற்பாடுகள் சுமுகமாக இடம்பெறுவதுடன்,

ஆசிரியர்களும், பெற்றோரும் இதற்கு உடந்தையாக மாறியிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று வியாழக் கிழமை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் தேசிய மாணவர் படையணியினருக்கான பான்ட் வாத்திய அணிவகுப்பு பயிற்சிகளை வடக்கு மாகாண படைத்தளதிகள் மேற்பார்வையில் படையினர் வழங்கியிருக்கின்றனர். இது முற்று முழுதாக தமிழித்தின் அடுத்த போராடும் வல்லமையுள்ள தலைமுறையை முழுதாக சீரழிக்கும் ஒரு பாங்கிலேயே சென்று கொண்டிருக்கின்றது.
இதேவேளை யுத்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும் மாணவர்கள் இதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்றுக் காலை குறித்த பான்ட வாத்திய அணிவகுப்பு பயிற்சிக்காக யாழ்.வந்த மாணவர்களின் பேருந்து ஒன்று பளை பகுதியில் விபத்திற்குள்ளானது.

இதில் 10 மாணவர்கள் படுகாயமடைந்திருப்பதுடன், மாணவர்களுக்கு தலைமை தாங்கிச் சென்ற ஆசிரியர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். எனினும் இந்தவிடயம் பெரிதாகிவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக படையினர் படுகாயமடைந்த ஆசிரியரை யாழ்ப்பாணம் கொண்டுசெல்லாமல் உடனடியாகவே அனுராதபுரம் வைத்தியசாலைக்கு தங்களுடைய உலங்குவானுர்தி மூலமே கொண்டு சென்றுள்ளனர்