siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 5 அக்டோபர், 2012

வன்னி மக்களுக்கென்று கூறி இலங்கை


 Friday 05 October 2012.By.Rajah.இராணுவத்திற்கு 2000 மில்லியன் ரூபா செலவில் புது சீருடைகள்! என்னடா இப்படி ஒரு தலையங்கத்தில் செய்தி வெளியாகி இருக்கு எண்டு பார்க்கிறீர்களா ? இப்படியான செய்தி அரச ஊதுகுழலான தினகரனில் தான் வரும். ஆனால் உண்மையான விடையம் என்ன தெரியுமா ? இலங்கை இராணுவத்திற்கு 2000 மில்லியன் ரூபா செலவில் இலங்கை அரசு புது சீருடைகளை வழங்கவுள்ளது என்பது தான் !

படையினருக்கான துணி வகைகளை வாங்க, இலங்கை மந்திரிசபை 2000 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. முப்படை, அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தேசிய கடெட் கூட்டுத்தாபனத்தில் உள்ளவர்களுக்கு இந்த நிதி மூலம் புதிய சீருடை தைத்துக் கொடுக்கப்படும். இது மட்டுமல்லாது 4000 மில்லியன் ரூபாய் செலவில் இராணுவத்திற்காக , 10 மாடியில் நவீன வைத்தியசாலை ஒன்றும் கட்டப்படுமாம்.

இதற்கு மந்திசபையின் ஒப்புதலும் கிடைத்துவிட்டது. இச்செய்தியை வெளியிட்ட ஊடக அமைச்சர் கேகலிய ரம்புக்வெல , படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் திறமான சுகாதார வசதிகளை வழங்க வேண்டியது அரசின் கடமை என்று கூறியுள்ளார். ஆனால் வடக்கை அபிவிருத்தி செய்ய பணமில்லையென்று மகிந்தர் எல்லோரிடமும் கையேந்துகிறார். இலங்கைக்கு அள்ளிக் கொடுக்கும் நாடுகள் கவனிக்க வேண்டிய செய்தி இது