Thursday04October2012,By.Rajah.வந்து கொண்டிருந்த பேரூந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதல் 10பேர் காயம்!
படையினரின் தேசிய மாணவர் படையணி பாண்ட் வாத்திய அணிவகுப்பிற்காக மாணவர்களை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த பேரூந்து விபத்திற்குள்ளாகியது.
இவ் விபத்தில் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 10மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்று யாழ்.துரைப்பா விளையாட்டரங்கில் தேசிய மாணவர் படையணின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு பயிற்சிக்காக படையினர் அழைப்பு விடுத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த அணிவகுப்பிற்காக மாணவர்களை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து பேரூந்தொன்று யாழ்.நோக்கி வந்துள்ளது.
இந்தபேருந்து ஏ9 வீதியில் பளை பகுதியில் எதிரே சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் வட்டக்கச்சியைச் சேர்ந்த இராஜேந்திரகுமார் என்ற ஆசிரியர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் படையினரின் ஏற்பாட்டில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார். இதேபோல் காயமடைந்த மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இராணுவத்தினர் தம்மீது பழி வீழ்ந்துவிடும் என்ற நிலையிலேயே படுகாயமடைந்த ஆசிரியரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவராமல், அனுராதரபுரத்திற்கு மாற்றியுள்ளனர் என ஆசிரியர் குழாம் தெரிவித்துள்ளனர்.