siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 1 நவம்பர், 2012

மியான்மர் முஸ்லிம் அகதிகள் சென்ற படகு கடலில் ??'

 வியாழக்கிழமை, 01 நவம்பர் 2012,By.Rajah.
மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளுடன் மலேசியா புறப்பட்ட படகு வங்காள தேசத்துக்கு அருகே கடலில் மூழ்கிய விபத்தில் 130 பேரைக் காணவில்லை. மியான்மாரில் பௌத்த மத பழங்குடியினரின் தொந்தரவிலிருந்து தப்பிப்பதற்காக அங்குள்ள சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்களில் கிட்டத்தட்ட 1 இலட்சம் பேர் இதுவரை அயல் நாடான வங்காள தேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மேலும் அகதிகளை ஏற்க முடியாது என்று வங்காள தேசத்திலிருந்து கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான அகதிகள் விரட்டியடிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் மலேசியாவில் தஞ்சம் புகுவதற்கென 135 பேருடன் சட்ட விரோதமாகப் புறப்பட்ட படகே வங்க தேசம் அருகே கடலில் மூழ்கியுள்ளது.
இதில் 6 பேர் மீன்பிடிப் படகுகள் மூலம் காப்பாற்றப் பட்டு காவலில் உள்ளனர்.
இதேவேளை வங்காள தேச கரையோர காவற்படையினரும் இராணுவத்தினரும் மீட்புப் பணிக்கும் கடலில் சடலங்கள் ஏதும் மிதந்து வருகின்றதா எனப் பார்வையிடவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மியான்மாரில் சொந்த மாநிலம் அற்ற சுமார் 800 000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் உள்ளனர்.
ஐ.நா சபை இவர்களை உலகில் மிக மோசமாகத் தொந்தரவுக்கு உள்ளாகும் சிறுபான்மையினத்தவர் என விவரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

கருத்துரையிடுக