10.11.2012.By.Rajah..பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில், அதிர்ஷ்டவசமாக நாடாளுமன்ற உறுப்பினர் உயிர்
தப்பினார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக், கியூ பிரிவு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மெதான் பக்டி.
இவர் நேற்று காலை பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகருக்கு கிழக்கே உள்ள தேரா பக்டி பகுதியில் உள்ள மசூதிக்கு சென்றார்.
மசூதிக்கு வெளியே ஷூவை கழற்றி விட்டு தொழுகைக்கு சென்றார். அப்போது அவரது ஷூவில் மர்ம நபர்கள் யாரோ வெடிகுண்டை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
தொழுகை முடிந்து வெளியே வந்த பக்டி, மீண்டும் ஷூவை அணிந்த போது அதில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது.
இதில் பக்டியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஹெலிகாப்டர் மூலம் குவெட்டா நகருக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். இச்சம்பவத்தில் மேலும் 12 பேர் காயமடைந்தனர்

0 comments:
கருத்துரையிடுக