siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 27 டிசம்பர், 2012

மோசடி செய்த இந்தியருக்கு 45 ஆண்டுகள் தண்டனை?


அமெரிக்க பங்குச்சந்தை உள்வணிகத்தில் ஈடுபட்டதாககுற்றம்சாட்டப்பட்ட அமெரிக்கவாழ் இந்தியரும் ஹெட்ஜ் நிதிய மேலாளருமான மேத்யூ மர்டோமா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மர்டோமா மீது, நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் வரும் ஜனவரி முதல் வாரம் வழக்கு தொடரப்பட்ட உள்ளது.
அல்ஸீமர் எனப்படும் மறதி நோய்க்கு மருந்து தயாரிப்பு குறித்து டாக்டரின் அறிக்கையை அறிந்து கொண்டார் மர்டோமா. இதனால் ரூ.1,518 கோடி ஹெட்ஜ் நிதியம் நஷ்டமடையும் எனத் தெரிந்து கொண்டு அதை தவிர்க்கும் முயற்சியில் விதிகளை மீறி அவர் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது அவருக்கு ரூ. 27.50 கோடி ரொக்க ஜாமீன் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மர்டோமா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.27.50 கோடி அபராதத் தொகையும் விதிக்கப்படும் என்று தெரிகிறது. மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டும்.
பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக அமெரிக்க பங்குச் சந்தையும் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக