siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 27 டிசம்பர், 2012

பின்லேடனிமே ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பாகிஸ்தான் அரசு அதிகாரி.


சர்வதேச தீவிரவாத தலைவர்... அமெரிக்காவையே மிரட்டிய கும்பலின் மூலகர்த்தா... என்று உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த மனிதரான ஒசாமா பின்லேடனிடமே, பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் ரூ.50,000 லஞ்சம் பெற்றது, அவரது டைரி குறிப்பில் இருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை தேடி, அமெரிக்க ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ரகசிய பங்களாவில் தங்கியிருந்த அவரை கடந்த ஆண்டு மே 2ம் தேதி, அமெரிக்க அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். பின்லேடன் தங்கியிருந்த ரகசிய பங்களாவை, இந்த ஆண்டு துவக்கத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். பின்னாளில் இதை நினைவிடம் ஆக்கி பிரச்னை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தாலேயே இந்நடவடிக்கையை பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

14 அடி உயரச் சுற்றுச்சுவர், இரும்புவேலியுடன் கூடிய 3 மாடி பங்களாவை இடிக்கும் பணியின்போது, பின்லேடனின் டைரி மற்றும் 1,30,000 ஆவணங்கள் கிடைத்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த டைரியில் இருந்த ஒரு குறிப்பு பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் உருது பத்திரிகையான ஜங் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

அபோதாபாத் பங்களாவை கட்டுவதற்கு, கிராம நிர்வாக அதிகாரி அனுமதி வழங்கவில்லை. அவரிடம் வலியுறுத்தி கேட்ட நிலையில், ரூ.50,000 கேட்டார். அதன்படி, அவருக்கு ரூ.50,000 தரப்பட்டது. ஆளானப்பட்ட பின்லேடனிடமே ரூ.50,000 பெற்ற அந்த கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் பின்னாளில் கைது செய்துள்ளனர். வீட்டை கட்டுவது யார் என்ற எந்த விவரமும் தெரியாமல், லஞ்சத்தை பெற்றுக் கொண்டு வீட்டை கட்ட அந்த கிராம நிர்வாக அதிகாரி அனுமதி அளித்துள்ளார். பாகிஸ்தான் அதிகாரிகள் சகஜமாக லஞ்சம் வாங்குவது பின்லேடனு க்கு நன்றாக தெரிந்துள் ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக