பாகிஸ்தானின் கராச்சி பகுதியில்
உள்ள இராமர் கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதியில் உள்ள இந்துக்கள்
போராட்டம் நடத்தினர்.
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பல கோவில்கள்
இடிக்கப்பட்டன. இந்நிலையில் கராச்சியின் சோல்ஜர் பஜார் பகுதியில் உள்ள ராம பிரான் கோவில இடிக்கப்பட்டது, மேலும் அக்கோவிலை சுற்றியுள்ள இந்துக்களின் வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கினர். அத்துடன் கோவிலில் சிலைகள் மீது அணிவிக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் மற்றும் நகைகளை கட்டுமான நிறுவனத்தினர் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற இந்துக்களை சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் இந்துக்கள் இணைந்து கராச்சி பிரஸ் கிளப் அருகே நேற்று போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அப்பகுதி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தி உள்ளனர்{புகைப்படங்கள், } |
திங்கள், 3 டிசம்பர், 2012
பாகிஸ்தானில் இராமர் கோவில் இடிப்பு: இந்துக்கள் போராட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக