siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 3 டிசம்பர், 2012

மாவீரர் நெப்போலியனின் கடிதம் ஏலம்

மாவீரன் நெப்போலியன் தனது வெளிவிவகாரத்துறை அமைச்ருக்கு எழுதிய கடிதம் சுமார் 2 லட்சத்து 43 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களுக்கு(2,43,500 டொலர்) ஏலம் போனது. பிரான்ஸ் மன்னர் நெப்போலியன் ரஷியப் படையெடுப்பின் போது, கடந்த 1812ஆம் ஆண்டு தனது வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹுயூகஸ் பெர்னார்ட் மாரெட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள க்ரெம்ளின் மாளிகையை 22ஆம் திகதி காலை 3 மணிக்கு தகர்ப்பேன் என்று சூளுரைத்துள்ளார்.
சங்கேத வடிவில் எழுதப்பட்ட இக்கடிதம் லண்டனில் நேற்று ஏலம் விடப்பட்டது.
இதனை பாரிஸைச் சேர்ந்த கடிதங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் அருங்காட்சியகம் ஏலத்தில் எடுத்தது. எதிர்பார்க்கப்பட்டதை விட 10 மடங்கு அதிக தொகைக்கு இக்கடிதம் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
மாவீரன் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டை கடந்த 1804ஆம் ஆண்டு முதல் 1815ஆம் ஆண்டு வரை ஆண்டார். தனது 51வது வயதில் செயின்ட் ஹெலினா தீவில் உள்ள சிறையில் உயிர் துறந்தார்{புகைப்படங்கள்,}

0 comments:

கருத்துரையிடுக