தங்கள் நாட்டு ஆளில்லா உளவு
விமானத்தை ஈரான் கைப்பற்றியுள்ளதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது.
வளைகுடா கடல் பகுதி வழியாக ஈரான் வான் எல்லைக்குள் புகுந்து உளவு பார்த்த
ஆளில்லா அமெரிக்க உளவு விமானத்தை சிறை பிடித்துவிட்டதாக ஈரான் நேற்று முன்தினம்
அறிவித்தது. அந்த விமானம் தொடர்பான சில தகவல்களையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜே கார்னி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரான் அமெரிக்க விமானத்தை சிறை பிடித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, எவ்வித ஆதாரமும் இல்லாத பொய்யான தகவல் தொடர்பாக எவ்விதக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார் |
வியாழன், 6 டிசம்பர், 2012
எங்கள் நாட்டு விமானத்தை ஈரான் சிறைபிடித்ததா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக