siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 8 டிசம்பர், 2012

இராணுவ ஆட்சியே காரணம் !தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை, கைது செய்யப்பட்டமை மற்றும் அச்சுறுத்தப் பட்டமை போன்ற சம்பவங்கள் வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியினாலேயே நிகழ்ந்தன.
இதனாலேயே பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் குழம்பியுள்ளன. இதனைத் தடுக்க அரசு நட வடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு ஐக்கிய நாடுகள் தூதுக்குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும், ஜப்பா னின் ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும் இடையே கொழும்பில் நேற்றுமுன்தினம் இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் கைது செய்யப்படுகின்றமை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகள் மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற ஏக்கத்தில் உள்ளனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையால் பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு எல்லாம் மூலகாரணம் வடக்கில் தொடர்ந்தும் நிலவும் இராணுவ ஆட்சியே. இதனை நீக்கி சுமுகநிலை ஏற்படுத்துவதற்கு அரசு எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
இதனை நாம் ஐ.நா. குழுவுக்குத் தெளிவாக எடுத்துக் கூறியதுடன் நிலைமைகளை நேரடியாகச் சென்று பார்வையிடுமாறும் கேட்டுள்ளோம். இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ளும்

0 comments:

கருத்துரையிடுக