இங்கிலாந்து முழுவதும் சுமார் 18 மில்லியன் போலி காண்டம்கள் சட்டத்திற்கு புறம்பாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தேவையில்லாத கர்ப்பங்களும், பால்வினை நோய் பரவுவதற்கான அபாயம் இருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இங்கிலந்து அரசின் சுகாதாரத்துறை அதிகாரி நேற்று விடுத்த ஒரு எச்சரிக்கை அறிக்கையில், நாடு முழுவதும் சுமார் 18 மில்லியன் தரம் குறைவாக உருவாக்கப்பட்ட போலி காண்டம்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், இதை உபயோகிப்பவர்களுக்கு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும், மேலும் தேவையில்லாத கர்ப்பங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற போலி காண்டம்களை கடைகளில் விற்பனை செய்வதை தடை செய்து, காண்டம் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 18 மாதங்களில்தான், இவ்வகையான போலி காண்டம்களின் இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இங்கிலாந்து குடும்ப கட்டுப்பாடு அலுவலகம் தெரிவித்துள்ளது. Durex போன்ற தரமான நிறுவனத்தின் காண்டம்களை மட்டுமே உபயோகிக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள குடும்ப கட்டுப்பாடு அலுவலகம், போலி காண்டம்களை இனம் கண்டு, தவிர்க்குமாறு அறிவித்துள்ளது. மேலும் காண்டம் இறக்குமதி குறித்து புதிய வகையான சட்டதிருத்தம் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது
செவ்வாய், 8 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக