கடல் வழியாக உலகை தனிநபராக வலம் வரும் பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் படகு பழுதடைந்து கடலில் சிக்கித் தவித்த பிரஞ்சுக்காரர் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவருகே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அலெய்ன் தெலோர் என்ற இந்த படகு பாய்மரப் படகு மாலுமியை பயணிகள் கப்பல் ஒன்று ஞாயிறன்று மீட்டிருப்பதாக ஆஸ்திரேலிய கடல் பயண பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
தனி நபராக உலகைச் சுற்றி பாய்மரப் படகில் வலம் வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அலெய்ன் டெலார்ட் சென்ற படகு மூன்று நாட்களுக்கு முன் பழுதடைந்திருந்தது
அவருடைய படகின் பாய்மரக் கம்பம் முறிந்துவிட அவர் தனது முயற்சியைக் கைவிட வேண்டி வந்தது.
டாஸ்மேனியாவிலிருந்து கடலில் ஐநூறு கடல் மைல்களுக்கு அப்பால் இவர் நின்றிருந்ததால், ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டிருந்தது.
ஆனால் ஆஸ்திரேலிய அதிகாரிகள் இவருக்கு உணவு, குடிநீர், உயிர்காப்பு மிதவை உடுப்பு ஆகியவற்றைக் கொடுக்க முடிந்திருந்தது என பிபிசி செய்தியாளர் நிக் பிரையண்ட் குறிப்பிடுகின்றார்.
63 வயதான அலெய்ன்னுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் அவர் மனத்தளவிலும் பெரிய பாதிப்பு எதுவும் அவருக்கில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
அலெய்னுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அண்டார்டிகா கண்டத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த ஓரியன் என்ற கப்பலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனை அடுத்து அந்தக் கப்பல் ஐம்பது மணி நேரம் பாதை மாறி பயணித்து இவரைக் காப்பாற்றியுள்ளது.
பிரான்சிலிருந்து கிளம்பி அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றி தனி நபராக பாய்மரப் படகில் வலம் வரும் வெண்டீ குளோப் ரேஸ் என்ற போட்ட்யின் பாதையில் அலெய்ன் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்
ஆனால் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்தப் படகுப் போட்டியில் முறைப்படி பதிந்துகொண்டு அலெய்ன் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கவில்லை
திங்கள், 21 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக