siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 21 ஜனவரி, 2013

மீண்டும் மாலியைக் கைப்பற்றுவோம் பிரான்ஸ் அறிவிப்பு

வடக்கு மாலியில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளை அப்புறப்படுத்த மாலி வந்து இறங்கிய பிரான்ஸ் இராணுவம் முழுமையாக இந்நாட்டை கைப்பற்றுவோம் என்று அறிவித்தது. முன்பு மாலி ஃபிரான்சின் குடியிருப்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது. இன்னும் சில வாரங்களில் மாலி முழுவதும் எங்களின் கட்டுபாட்டில் கொண்டு வருவதே இத்தாக்குதலின் இலட்சியம் என்று பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் யேவ்ஸ் லீ டிரியான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் மாலியின் வடபகுதியில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளை ஒழிக்க பிரான்ஸ் ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. விமானத்தாக்குதலுக்கு பயந்து அங்கிருந்த அல்கொய்தா போராளிகளும் கூட்டாளிகளும் டயாபெலி நகரை விட்டு வெளியேறினர். பிரெஞ்சு படைகள் நியோனோ நகரத்தில் புதிய ராணுவத்தை அமைத்துள்ளது. இந்நகரம் தெற்கே 40 மைல் தொலைவில் உள்ளது நேற்று பிரெஞ்சுப்படைவீரா்கள் எவ்விதத்தாக்குதலிலும் ஈடுபாடமல் ஓய்வெடுத்தனர். நீண்ட போருக்கான திட்டமிடுதலில் ஈடுபட்டிருப்பதாக தளபதி ஃபிரட்ரெக் தெரிவித்தார். இன்னும் பல தகவல்கள் தேவைப்படுவதாகவும் அதற்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். டயாபலி நகரை விட்டுக் கிளம்பிய ஹமீது டோங்காரா பொதுமக்களில் ஒருவர்கூட இந்த போரில் கொல்லப்படவில்லை நம்பமுடியாவிட்டாலும் இதுதான் உண்மை என்று விவரித்தார். ஏனென்றால் பிரெஞ்சுப்படைகளின் தாக்குதல் தொடங்கியதும் போன திங்களன்று அக்கிம் படைகள் டயாபலி நகரை நோக்கி வந்தன. அப்போது அங்கிருந்த மக்களிட் நாங்கள் முஸ்லீம்கள் நாங்கள் அல்லாஹவின் பெயரால் இங்கு வந்திருக்கிறோம் யாரையும் துன்புறுத்த மாட்டோம் என்று தெரிவித்ததை டுங்காரா நினைவுபடுத்தினார். அக்கிம் படைகள் டயாபலி நகரில் உள்ள மருந்துகடைகளில் புகுந்து அங்கிருந்த மருந்துகளை அள்ளிச்சென்றன. மக்களில் ஒருவரும் வெளியே வரக்கூடாது என்று எச்சரித்தனர் மீறி வந்த ஒருவரை சுட்டு தள்ளியதாக டங்காரா கூறினார். அபுபக்கர் மய்கா(35)என்பவர் இந்த தாக்குதல் பற்றிக்கூறும்போது, அல்ஜீரியர் லிபியா நாடுகளைச் சேர்ந்த துவாரெக் இனத்தவரே பெரும்பாலும் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறினார். இவர்கள் அனைவரும் முகத்தை மூடியிருப்பதால் அவர்களின் மொழிவழக்கை வைத்துதான் அவர்களை இனம்பிரித்தறிய முடியும் என்றார். மாலி படைகளைச் சோ்ந்த தளபதி செய்யது சொகோபா பொதுமக்களும் கலகக்கார்களுடன் கலந்திருப்பதால் இசுலாமியத் தீவிரவாதிகளைத் தனித்து வீழ்த்துவது கடினம் என்றார்

0 comments:

கருத்துரையிடுக