ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ள இச்சூழலில், பிராங்க் ஃபர்ட்(Frankfurt) விமான நிலையத்தில் நேற்று விமானசேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த பிராங்க் ஃபர்ட் விமான நிலையத்தில் தினமும் 1250 விமானசேவைகள் நடைபெறும். ஆனால் இந்த கடுமையான பனிப்பொழிவை தொடர்ந்து 355 விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உள்ளூர் விமானப் போக்குவரத்தும், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
விமான சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகளுக்கு இலவச உணவு, குளியல் வசதி, 2 தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் வசதி மற்றும் தேவைப்பட்டால் விடுதியில் தங்கும் வசதியும் செய்து தரப்படுகிறது.
பனியினால் கார்ச்சக்கரம் வழுக்கி விபத்து ஏற்படாமல் இருக்க பல சாலைகளில் காவல்துறையினர் போக்குவரத்தைத் தடை செய்து வருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக