சீன பல்கலைக்கழகங்களில் நேற்று நுழைவுத் தேர்வுகள் தொடங்கின. இதில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகளை மட்டும் எழுதினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கலைப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் சீன மொழித்தேர்வு மற்றும் கணிதத் தேர்வுகளை எழுதினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக்கப்பட்ட பாடங்களில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சிங்குவா பல்கலைக் கழக சேர்க்கை அதிகாரி கூறுகையில், “மாணவர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காககவும், தங்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்களில் அதிக கவனம் செலுத்தும் திறமையான மாணவர்களை ஈர்ப்பதற்காகவும் ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது” என்றார்.
திறமையான மாணவர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு அனுமதிக்கும் வகையில், தேசிய பொதுத் தேர்வுகள் தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் இதுபோன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு 27 பல்கலைக்கழகங்கள் ஒரே சமயத்தில் இத்தேர்வை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக