அமெரிக்காவின் மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் இன்று சுமார் 27 ஆயிரம் பேர் பங்கேற்ற மராத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்றவர்கள் இறுதிக் கோட்டை நெருங்கிய வேளையில் பீரங்கி முழங்கியது போன்ற சப்தத்துடன் குண்டு வெடித்தது.தொடர்ந்து 1/2 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால், மாரத்தானில் பங்கேற்றவர்கள் மூலைக்கு ஒருவராக சிதறி ஓடத் தொடங்கினார்கள். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன.
சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலீஸார், காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 2 பேர் பலியானதாவும் சுமார் 30 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாஸ்டன் பொலீஸார் தெரிவித்தனர்.
இந்த குண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கி வெடிக்கச் செய்திருக்கலாம் எனவும், இது தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கக் கூடும் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை தீவிரமாக கண்காணித்து வரும் ஒபாமா, காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் வெடிக்காத 2 குண்டுகளை கைப்பற்றிய போலீசார் அவற்றை செயலிழக்கச் செய்தனர். இச்சம்பவத்தையடுத்து, நியூ யார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது
0 comments:
கருத்துரையிடுக