உலகிலேயே மிக வலிமையான ராணுவத்தை பெற்றுள்ள ”சீன மக்கள் விடுதலை ராணுவம்” என்று அழைக்கப்படும் இந்த ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை பற்றிய வெள்ளை அறிக்கை முதன் முதலாக வெளியிடப்பட்டது.
அதன்படி அங்கு 23 லட்சம் துருப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத்தவிர கட்டளைப்பிரிவு, அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை பிரிவுகளில் வேலை பார்ப்போர்களும் இருக்கிறார்கள். மேலும் சீனாவில் இந்த ஆண்டு ராணுவத்திற்காக 10,000 கோடி டொலருக்கு மேல் செலவிடப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சீனாவிற்கு, கிழக்கு சீனக்கடல் பகுதியில் ஜப்பானுடன் தீவுப்பிரச்சினையும், தைவான் ராணுவத்துடன் தனி நாடு பிரச்சினையும் இருந்து வருகிறது. இயற்கை வளங்கள் நிறைந்த தென் சீனக்கடல் பகுதியில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவிடையே பிரச்சினையும் இருந்து வருகிறது.
இந்நிலையில் சீனா வெளியிட்டுள்ள இந்த ராணுவ வெள்ளை அறிக்கை, ஒரு மிரட்டலின் அறிகுறியாக இருப்பதாக கூறப்படுகிறது
0 comments:
கருத்துரையிடுக