siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 24 ஏப்ரல், 2013

அமைச்சருக்கு மர்ம பார்சல்: வடகொரியாவின் மிரட்டலா?


தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் க்வான்-ஜின்னுக்கு மர்மப் பொடியுடன் கூடிய மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம்-க்வான் ஜின்னுக்கு நேற்று மர்ம பார்சல் ஒன்று வந்தது.
அதில் வடகொரியாவுக்கு எதிரான அவருடைய நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்தும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் ஒரு கடிதம் இருந்தது.
மேலும் அந்த மர்ம பார்சலில் சந்தேகத்துக்குரிய வகையில் வெண்ணிற பொடித் துகள்களும் இருந்தன.
அந்த பொடியில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆராய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பார்சல் அனுப்பப்படுவதற்கு முதல் நாளான நேற்று முன்தினம் (திங்கள்கிழமை), கிம் க்வான்-ஜின்னின் அலுவலகத்துக்கு வெளியே அவருக்கும் தென்கொரிய அரசுக்கும் மிரட்டல் விடுக்கும் வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் வீசி எறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரிய தீபகற்பகத்தில் போர்ப்பதற்றம் நிலவும் சூழ்நிலையில் எங்களை அச்சுறுத்தும் வடகொரியாவின் மற்றுமொரு முயற்சிதான் இந்தச் செயல் என தென்கொரிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 

0 comments:

கருத்துரையிடுக