siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

தென்கொரியா அழைப்பை நிராகரித்த வடகொரியா .,


தென்கொரியா எல்லையில் அமைந்துள்ள கெசாங் என்ற தொழில் மையம் ஒன்றில் வடகொரியா மற்றும் தென்கொரியா இரண்டும் கூட்டாக செயல்பட்டு வந்தது.
இந்த தொழில் மையத்தில் இரு நாட்டு தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் போர் பிரகடனம் செய்ததை தொடர்ந்து கடந்த 3ம் திகதி இந்த வளாகத்தை வடகொரியா மூடியது. இதில் பணிபுரிந்த தனது பணியாளர்களில் ஒரு பகுதியினரை கடந்த 9ம் திகதி தென்கொரியா திரும்ப அழைத்துக்கொண்டது.
ஆனால் மீண்டும் அத்தொழில் மையத்தை திறக்க பேச்சு வார்த்தை நடத்த வடகொரியாவுக்கு தென்கொரியா நேற்று அழைப்பு விடுத்தது.
இதற்கு வடகொரியா இன்று காலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த பேச்சு வார்த்தை அழைப்பை ஏற்கவில்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தென்கொரியா தெரிவித்திருந்தது. ஆனால் இந்த அழைப்பை மோசடியானது என்று கூறி இன்று வடகொரியா நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் தென்கொரிய தொழிலாளர்கள் 170 பேரை திரும்ப பெற்றுக் கொள்வதாக தென்கொரிய அரசு இன்று அறிவித்துள்ளது
 

0 comments:

கருத்துரையிடுக