siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கட்டிட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை ..

..

வங்கதேச தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள சவார் என்ற இடத்தில் 8 மாடி ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை கட்டிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடிந்தது.
அதில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 1000 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அங்கு தீயணைப்பு படையினரும், பொலிசாரும் இணைந்து இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானவர்களின் பலரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் இறந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் 3 ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு வெளியில் இருந்து தண்ணீரும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெறுபவர்களுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரத்த தானம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று இரவில் மட்டும் 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி தவிப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கட்டிடம் இடிந்ததில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வங்கதேசம் நேற்று ஒரு நாள் துக்க தினம் அறிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு தேசிய கொடி அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன
 

0 comments:

கருத்துரையிடுக