siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 27 ஏப்ரல், 2013

அவுஸ்திரேலியா கலந்துகொள்ளும்: பொப் கார்

இலங்கை மீது முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கருத்தில்கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை புறக்கணிக்கப்போவதில்லையென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.
 அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு கருத்து தெரிவிக்கும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்துகொள்வதில் தான் சௌகரியமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
 கனடாவைத் தவிர 55 பொதுநலவாய உறுப்பு நாடுகளில் அனைத்தும் இதில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 இலங்கைக்கு எதிராக  ஐக்கிய நாடுகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக தாம் வாக்களித்தாகவும், தற்போது அமர்வை புறக்கணிப்பதானது வேண்டத்தகாத விளைவை ஏற்படுத்துவதுடன் இலங்கையை தனிமைப்படுத்துமெனவும் பொப் கார் குறிப்பிட்டுள்ளார்.
 மேலும் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் மற்றும் திருப்பி அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலும் பொப் கார் இதன் போது கருத்து வெளியிட்டுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக